மதுரையில் இயந்திர நடவுக்கு நெல் விவசாயிகள் ஆர்வம்

மதுரையில் இயந்திர நடவில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக வயல்களில் ‘பாய்விரிப்பு’ முறையில் நெல் நாற்றங்கால் அமைத்து வருகின்றனர்.இயந்திர நடவு முறை சாகுபடியால் பணம், நேர விரையம் தவிர்க்கப்படுகிறது.

இம்முறையில் திருந்திய நெல் சாகுபடி செய்ய வேளாண் துறை மானியம் வழங்குகிறது.

மதுரையில் 45 ஆயிரம் ஏக்கரில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. அணைகளில் நீர்வரத்து தேவையான அளவு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே நுாறு சதவீதம் அளவில் இயந்திர நடவு முறையில் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அலங்காநல்லுார் மெய்யப்பன்பட்டி விவசாயி சாம்ராஜ் கூறியதாவது:

  • இயந்திர நடவு முறைக்காக ‘பாய் விரிப்பு’ முறையில் உழவடை செய்த வயலில் பாலிதீன் விரிப்புகளை விரித்து அதன் மீது சிறிதளவு வயல் களிமண் ஒரு அடி நீளம், முக்கால் அடி அகலத்தில் பரப்பப்படும்.
  • அதில் ‘கோ 36’ ரக விதை நெற்களை துாவி மீண்டும் களிமண் கொண்டு மூடப்படும்.
  • களிமண் மீது வைக்கோல் பரப்பி 15 நாட்கள் விட்டு விடுவோம்.
  • 16வது நாளில் நாற்று தயாராகி விடும்.
  • அவற்றை ‘கேக்’ போல் பாய் விரிப்பில் இருந்து எடுத்து இயந்திரம் மூலம் உடனுக்குடன் நடவு செய்யப்படும்.
  • நடவு செய்த மூன்று மாதத்தில் அறுவடை செய்யப்படும், என்றார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *