பாரம்பரிய நெல் ரகங்களில் சற்றே வித்தியாசமாக உருண்டை வடிவத்தில் இருக்கும் நெல் ரகம் மிளகு சம்பா. பார்ப்பதற்கு மிளகுபோல இருப்பதால், மிளகு சம்பா என அழைக்கப்படுகிறது.
வெள்ளை நிறம் கொண்ட சன்ன ரக அரிசியைக் கொண்ட இது, 130-நாள் வயதுடையது. இந்த ரக நெல் மேடான பகுதியில் விளையக்கூடியது. நேரடி விதைப்புக்கும் நடவு முறைக்கும் ஏற்றது. எந்த ரசாயன உரங்களும் தேவையில்லை. இந்த ரகம் தமிழகத்தில் பரவலாகப் பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒற்றை நாற்று முறையில் மேலாக நடவு செய்யும்போது, அதிகத் தூர் வெளிவந்து அதிக மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 28 மூட்டை கிடைக்கும்.
மிளகு சம்பா அதிக மருத்துவக் குணம் கொண்டது. பசியைத் தூண்டும். தலைவலியைப் போக்கும் தன்மை கொண்டது. இந்த அரிசியில் வடித்த கஞ்சியைத் தொடர்ந்து அருந்திவந்தால், மருத்துவக் குணம் நிரம்பியதாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் மல்யுத்த வீரர்கள் இதை உண்டு வலிமை பெற்றுள்ளனர்.
– நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 09443320954
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நல்ல பதிவு என்னை இயற்கை வழி உழவுதொழில் செய்ய
தூண்டியது உங்களைபோன்றோர்தான்
நல்ல பதிவு என்னை இயற்கை வழி உழவுதொழில் செய்ய
தூண்டியது உங்களைபோன்றோர்தான் நன்றி