மல்லிகைப்பூ போன்ற பாரம்பரிய நெல்!

தூயமல்லி நெல் ரகம் பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானது, சன்னமான ரகம். நெல், வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும் தூய்மையாகவும் இருக்கும்.

அரிசி வெள்ளை நிறம். நெல்லை பார்த்தாலே அரிசியை அள்ளிச் சாப்பிட வேண்டும் என்பது போல், நெல் மணிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

அரிசி பளபளவென இருக்க வேண்டும். மிகவும் சன்னமாகவும் இருக்க வேண்டும் என்று இல்லத்தரசிகள் வழக்கமாக விரும்புவார்கள். அரிசி சீக்கிரமே வேக வேண்டும். வெந்த அரிசி சாதம், மல்லிகைப் பூவைப் போல் இருக்க வேண்டும்.

இப்படி மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மை கொண்ட தூயமல்லி, மக்களை பெரிதும் கவர்ந்தது. இப்படி எல்லா குணங்களும் கொண்டு பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது தூயமல்லி.

இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும்கூட சத்து மிகுந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பலகார வகைகளுக்கும் பழைய சாதத்துக்கும் ஏற்ற ரகம். இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியது.

தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் ரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்.

இந்த நெல்லை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க, உழவர்களிடையே போட்டிகளை நடத்தி பரிசுகளும் கொடுத்திருக்கிறார்களாம்.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 09443320954


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *