திருத்திய நெல் சாகுபடியில் சாதனை

திருந்திய நெல் சாகுபடி (SRI) மூலம், சாதாரண முறையில் நெற்பயிரிட்டவர்களை காட்டிலும், அதிக மகசூலையும், லாபத்தையும் பெற்றுள்ளனர்
குறைந்த விதை நெல், குறைந்த பணியாளர்கள், குறைந்த நீர் மற்றும் குறைந்த விதை நெல்லை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற கொண்டு வரப்பட்ட திருந்திய நெல் சாகுபடி திட்டம், விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

குறைந்த செலவு; அதிக லாபம்
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், 15 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதிக மகசூலை பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் கூறும்போது, “”செம்மை நெல் சாகுபடி முறைக்கு தேவையான விதை நெல், நெற்பயிரை நடுவதற்கு மார்க்கர் கருவி, களையெடுப்பிற்கு, “கோனோவீடர்‘ இயந்திரம், உர வகைகளையும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வழங்கி பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.
சாதாரண முறையில் நெல் பயிரிட்டால் ஏக்கருக்கு, 25 முதல், 30 மூட்டை நெல் விளையும். ஆனால், செம்மை நெல் சாகுபடி முறையில் பயிரிட்டதால், 40 மூட்டை நெல் விளைந்துள்ளது.

விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற கவலை, செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் இல்லை. குறைந்த பணியாளர்களைக் கொண்டு, அதிக மகசூலை பெற முடிகிறது,” என்றார்.
மீஞ்சூர் வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “”நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட செம்மை நெல் சாகுபடி முறையால், அதிக மகசூலை பெற முடியும்.
இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு, அலுவலக நாட்களில் எங்களை அணுகினால், உரிய ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம்,” என்றார்.

திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில், வேளாண்மைத் துறை, ஒரு ஹெக்டேருக்கு இலவசமாக வழங்கப்படும் பொருட்கள்:

 

  • விதை நெல் 8 கிலோ
  • யூரியா 330 கிலோ
  • பொட்டாஷ் 80 கிலோ
  • சூப்பர் பாஸ்பேட் 300 கிலோ
  • உயிர் பூஞ்சான் கொல்லி 4.5 கிலோ
  • அசோஸ்பைரில்லம் 50 பாக்கெட்
  • ஜிங் சல்பேட் 25 கிலோ
  • பசுந்தால் உரம் விதை 40 கிலோ

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *