பப்பாளியில் பளபளக்கும் லாபம்!

முல்லை பெரியாறு அணை, வைகை அணை தண்ணீரை நம்பி மதுரை மாவட்ட விவசாயிகள் உள்ளனர். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும். ஆண்டுதோறும் பருவ மழைகள் தொடர்ந்து பொய்த்து வருவதால் அணைகள் வறண்டு வருகின்றன. குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
வறட்சியான நிலையிலும் சொட்டு நீர் பாசன முறையில் மதுரை மாவட்டம் மேலுார் அருகே வெள்ளலுார் முன்னோடி விவசாயி மகாலிங்கம் நாட்டு ரக பப்பாளியை விளைவித்து அதிக மகசூல் ஈட்டி வருகிறார்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி முற்றிலும் இயற்கை முறையில் பப்பாளி சாகுபடியில் சாதனை படைத்து வருகிறார். அவர் கூறியதாவது:

  • தேனி மாவட்டம் பெரியகுளம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் ‘ரெட் லேடி’ எனும் வீரிய ஒட்டு ரக பப்பாளி, நாற்று ஒன்று 20 ரூபாய் விலையில் 800 கன்றுகள் வாங்கி நாற்று ஒன்றுக்கு ஏழு அடி இடைவெளியில் பயிரிட்டேன்.
  • மருத்துவ குணம் நிறைந்த, சத்துக்கள் மிகுந்த பப்பாளி செடிகளுக்கு அடியுரமாக மண் புழு, கால்நடை எருவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறேன்.
  • எட்டு மாதத்தில் பூப்பூக்க துவங்கியது. நடவு செய்து 11 வது மாதத்தில் இருந்து காய்கள் பறிக்கலாம். தொடர்ந்து மூன்று வருடம் காய் பறிக்கலாம்.
  • பராமரிப்பை பொறுத்து அதிக மகசூல் கிடைக்கும். பப்பாளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனைகிறது.
  • ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன்.
  • வாரம் ஒரு முறை இரண்டு டன் எடையளவில் காய்கள் கிடைக்கும் பட்சத்தில் மூன்று ஆண்டுகளில், எட்டு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டுநீர் பாசனத்துக்கு பலமுறை முயன்றும் பயனில்லை.
  • எனவே சொந்த நிதியில் சொட்டு நீர் பாசன முறையில் பப்பாளியை விளைவிக்கிறேன்.
  • தற்போது 400 செடிகள் பூத்துள்ளன. 400 செடிகள் பூக்கும் தருவாயில் உள்ளன என்றார்.

தொடர்புக்கு 09842139356 .
நன்றி:தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *