பப்பாளி சாகுபடி முறைகள்

 • பப்பாளியில் ஆண், பெண் என இருவகை உண்டு. இருபாலினமும் கொண்ட ரகங்களும் உண்டு. கோ.3, கோ.7 போன்ற ரகங்கள் ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் கொண்டிருக்கும். இது எளிதில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும்.
 • பப்பையின் எனப்படும் பப்பாளி பால் எடுப்பதற்கு கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை.
 • கோ.2, கோ.5 ரகங்கள் எக்டேருக்கு 200 முதல் 250 டன் மகசூல் தரும்.
 • கோ.3 ரகம் 120 டன் வரை மகசூலும், கோ.7 ரகம் 225 டன் மகசூலும் தரும்.
 • இரண்டு முதல் இரண்டரை ஆண்டு வயதுடைய பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

விதை அளவு:

 • ஒரு எக்டேருக்கு அரை கிலோ விதை தேவை.
 • இதற்கு 2 கிராம் பவிஸ்டின் மருந்து கொண்டு நேர்த்தி செய்தல் வேண்டும்.
 • தொழுஉரம், மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைப்பது நல்லது.
 • ஒரு பைக்கு 4 விதைகள் வீதம் ஊன்றி நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி மூலம் நீர் ஊற்ற வேண்டும்.
 • ஒரு பைக்கு 1 கிராம் வீதம் கார்போபியுரான் 3 கிராம் குருணை மருந்து இட்டு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.

நடவு:

 • 60 நாள் நாற்றுகளை 1.8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
 • ஒரு குழிக்கு தலா 45 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழம் தேவை.
 • பப்பாளி செடியை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

நன்றி: தினமணிபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பப்பாளி சாகுபடி முறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *