பப்பாளி பயிரிடும் முறை

கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி.

தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன.

பயிரிடும் முறை:

  • மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும்.
  • மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும்.
  • ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
  • பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள்.
  • நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது.
  • வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன.
  • இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.
  • பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை.
  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம்.
  • 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும்.
  • பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.
  • வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது.
  • ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • 4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் .
  • செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும்.
  • கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.

பப்பாளிக் காய்களில் பால் எடுக்கும் முறை:

  • பப்பாளிக் காய்களில் இருந்து பால் எடுக்க, முதிர்ந்த காய்களில் 2 முதல் 3 இடங்களில் லேசாகக் கீறல் ஏற்படுத்தி, பாலை வடிக்க வேண்டும்.
  • அதிகாலை முதல், காலை 10 மணி வரை, 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை பால் எடுக்கலாம்.
  • பப்பாளிப் பாலை அலுமினியப் பாத்திரம் அல்லது ரெக்ஸின், பாலிதீன் தாள்களில் சேகரிக்கலாம்.
  • பாலை சூரிய ஒளி அல்லது 40 டிகிரி சென்டிகிரேடில் செயற்கை உலர் கருவிகளில் உலர்த்தலாம்.
  • உலர்த்தத் தாமதம் ஆனால் தரம் பாதிக்கப்படும்.
  • ஒரு ஹெக்டேருக்கு 3 ஆயிரம் முதல் 3,750 கிலோ வரை பப்பாளி பால் கிடைக்கும்.
  • பப்பாளிப் பழங்களைவிட பப்பாளிக் காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
  • ஓசூர், பெங்களூர் பகுதிகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன.

பப்பாளி பழத்தின் அருமைகள்:

  • பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன.
  • பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
  • பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
  • பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும்.
  • ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  • பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற நொதிப் பொருள் (என்ûஸம்) நிறைய மருத்துவ குணம் கொண்டது.

பப்பாளி பழத்திற்கு அதிகமாக மாவு பூச்சி தாக்குதல் வருகிறது. இந்த மாவு பூச்சியை கட்டுபடுத்துவது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பப்பாளி பயிரிடும் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *