அதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: வேளாண் பல்கலை சாதனை

தமிழ்நாட்டில் பாசிப்பயறு சுமார் 1.89 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 1.21 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சராசரி மகசூல் எக்டருக்கு 642 கிலோவாக உள்ளது.

ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சியடையும் தன்மை கொண்ட பாசிப்பயறு ரகம் உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் விளைவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கோ 923 – வி.சி. 6040 ஏ என்ற ரகங்களை ஒட்டு சேர்த்து தனி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த குறுகிய கால ரகம் 55, – 60 நாட்களில் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது.

இந்த ரகம் சராசரியாக ஒரு எக்டருக்கு 1000 கிலோ மகசூல் தரவல்லது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் பயிரிட ஏற்ற நல்ல உயர் விளைச்சல் ரகமாகும். இயந்திர அறுவடை செய்யவும் ஏற்றது.

நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரக்கூடியது. 2019 ல் பயறு வகை துறையிலிருந்து 18 ஆயிரம் கிலோ விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர்.

எனவே பாசிப்பயறு கோ 8 ரகத்தினை வரும் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து நல்ல விளைச்சல் மற்றும் லாபம் பெற்று பயனடையலாம்.

ஆலோசனைக்கு 04222450498 .


பேராசிரியர் ஜெயமணி
தலைவர், பயறு வகைத்துறை
இணை பேராசிரியர் முத்துசாமி
வேளாண் பல்கலை, கோவை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “அதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: வேளாண் பல்கலை சாதனை

  1. SRENIVAAS says:

    இந்த ரகம் விதைப்பு முறை அட்டவணைகள் அனுப்பினால் நன்றாக இருக்கும் ஐயா..
    மற்றும் முளைப்பு திறன் கொண்ட விதைகள் கிடைக்கும் இடங்கள் விவரங்கள் கூறமுடியுமா ஐயா வணக்கம் நன்றி

  2. SRENIVAAS says:

    இந்த ஒட்டு ரக பாசிப்பயறு விதைகள் எங்கு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *