பயறு ஒண்டர்!

இந்தாண்டை  சர்வதேச பயறு ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

குறைந்த இலைப்பரப்பு, ஒளிச்சேர்க்கை, இலைகளில் குறைந்த உணவு உற்பத்தி ஆகிய காரணங்களால் பயிர்களின் காய்கள் மற்றும் விதை உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. இதனால் மகசூல் திறன் குறைகிறது.
இவற்றின் மகசூலை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவை தான் பயறு ஒண்டர்.

பூக்கும் பருவத்தில் இலைகளில் ஒருமுறை தெளித்தால் போதும். இதை தெளித்தால் டி.ஏ.பி., மற்றும் என்.எ.எ., தெளிக்க வேண்டியதில்லை.
ஏக்கருக்கு இரண்டு கிலோ பயறு ஒண்டரை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து, 200 மில்லி ஒட்டும் திரவம் கலந்து மாலை நேரத்தில் பயிர்கள் நனையும்படி தெளிக்க வேண்டும்.

இதனால் இலைகள் அதிக நாட்களுக்கு பசுமையாக இருக்கிறது. ஒளிச்சேர்க்கை அதிகரித்து பூக்கள் உதிர்வது குறைந்து 20 சதவீத மகசூல் அதிகரிக்கிறது. இதன் விலை கிலோ ரூ.200.
கோவையில் உள்ள வேளாண் பல்கலை பயிர் வினையியல் துறையில் விவசாயிகள் இதனைப் பெறலாம்.
போன்: 04226611243

கொ. பாலகிருஷ்ணன், பயிர் வினையியல்
துறைத்தலைவர்,
விவசாய கல்லரி, மதுரை

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *