பயறு ஒன்டர் பூஸ்டர் பயன் படுத்தும் முறை

பயறுவகைகளில் பூக்கும் காலத்தில் மண்ணில் ஏற்படும் சில வேதியியல் மாற்றங்களால் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன. காய்களின் நீளமும் மணிகளின் திடமும் குறைந்துவிடுகின்றன. இந்த பாதிப்பை தடுப்பதற்காக 2 சதம் டி.ஏ.பி.யுடன் 40 சதம் / பி.பி.எம். என்.ஏ.ஏ.  45, 60வது நாட்களில் தெளிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து வந்தது.

இந்த கலவையைத் தயாரித்து தெளிப்பதில் சில பிரச்னைகளும் ஏற்பட்டது. எனவே இதை மிகவும் எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் த.வே.பல்கலைக்கழகம் பயறு ஒண்டர் என்ற நுண்ணூட்டக்கலவையை அறிமுகப்படுத்தியது.

இதனை ஏக்கருக்கு 2.2 கிலோ என்றளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 45, 60ஆம் நாள் டி.ஏ.பி., என்.ஏ.ஏ.வுக்கு மாற்றாக தெளிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

இத்தொழில்நுட்பத்தை தர்மபுரி மாவட்டத்தில் வயல்வெளி ஆய்வின் மூலம் உழவர்களுக்கு அதிகப்படுத்தி பயறு ஒண்டரின் செயல்திறனை விளக்க பாப்பாரபட்டி வேளாண் அறிவியல் நிலையம் 5 இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டது.

வயல்களில் ஆய்வு செய்யப்பட்ட 3 தொழில் நுட்பங்கள்

  • 2 சதம் டி.ஏ.பி. இலைவழித் தெளிப்பு
  • 2 சதம் டி.ஏ.பி., 40 சதம் / பி.பி.எம். என்.ஏ.ஏவை 45, 60வது நாட்களில் இலைவழி தெளித்தல்
  •  பயறு ஒண்டர் 2.2 கிலோ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 45, 60ம் நாள் தெளித்தல்

ஐந்து உழவர்களின் வயல்களில் உளுந்து பயிரில் வயல்வெளி ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் 10 செடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் காய்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.மேலும் அறுவடை செய்யும்போது தனித்தனியாக அறுவடை செய்து விளைச்சல் கணக்கிடப்பட்டது.
மேற்கண்ட பட்டியலின்படி “பயறு ஒண்டர்’ 2.2 கிலோ/எக்டர்/200 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கும்போது 2 சதம் டி.ஏ.பி.யுடன் 40 சதம் / பி.பி.எம். என்.பி.ஏ. கரைசலைவிட 10.30 சதம் விளைச்சல் அதிகமாவதும், 2 சதம் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பதைவிட 17.81 சதம் அதிகமாவதும் கண்டறியப்பட்டது.
காய்களின் எண்ணிக்கையும் பயறு ஒண்டர் தெளித்த வயல்களில் அதிகமாகக் காணப்பட்டது.

எனவே 2 சதம் டி.ஏ.பி.யுடன் 40 சதம்/பி.பி.எம். என்.ஏ.ஏ. கரைசலைப் பூக்கும் பருவத்தில் தெளிப்பதற்கு பதிலாக பயறு ஒண்டர் 2.2 கிலோ/எக்டர் என்ற அளவில் தெளித்து பயறு விளைச்சலை அதிகரிக்கலாம்.

(தகவல்: முனைவர் பா.ச.சண்முகம், முனைவர் நா.அ.சரவணன், முனைவர் நா.தமிழ்செல்வன், வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரபட்டி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம்-6.  அலைபேசி எண்: 09443026501.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “பயறு ஒன்டர் பூஸ்டர் பயன் படுத்தும் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *