தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு 2012 டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் தொழில் முனைவோர், மாணவர்கள், இல்லத்தரசிகள் உள்பட அனைவரும் பங்குபெறலாம்.
2012 டிச.11-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ள இந்த வகுப்பில் பயிற்சி குறிப்பேடு, கையேடு மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சிக் கட்டணம் மற்றும் தகவல்களுக்கு 04426263484 என்ற தொலைபேசி எண்ணில் பயிற்சி மையத் தலைவரைத் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், யு-30, 10-வது தெரு, அண்ணா நகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), சென்னை – 40 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
நன்றி : தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்