இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்புக்கான பயிற்சி ஈரோட்டில், ஆறு நாட்கள் நடக்கிறது.

மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதல்படி கனரா வங்கி நடத்தும் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 2013 ஃபிப்., 11 முதல், 16 வரை ஆறு நாட்கள், ஈரோடு அசோகபுரம் சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

  • சுயதொழில் செய்ய விரும்புவோர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • இப்பயிற்சி பெற எவ்வித கல்வித்தகுதியும் தேவையில்லை.
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
  • மேலும் மதிய உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
  • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மேலும் விபரங்களுக்கு பயிற்சி நிலைய தொலைபேசி எண், 04242290338 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம், என கனரா வங்கி முதுநிலை மேலளார் பூபாலன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *