கால்நடை பண்ணையம் இலவச பயற்சி

கரூர் மாவட்டத்தில் லாபகரமான கால்நடை பண்ணையம் அமைக்க, இலவச பயற்சி பெற கால்நடை ஆராய்ச்சி மைய அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் மற்றும் பயிற்சி மையத்தின் நிதியுதவியுடன், ‘லாபகரமான கால்நடை பண்ணையம்’ பயிற்சி வரும், 2015 டிசம்பர் 7 முதல், 12ம் தேதி வரை, ஆறு நாட்களுக்கு இலவசப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில் அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு ஆகியவற்றில் முக்கிய பங்களிக்கும் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல்,  பண்ணை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை, கால்நடை மற்றும் கோழிகளைத் தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கிக்கடனுதவி, பண்ணைக்கான காப்பீடு மற்றும் பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் மற்றும் பசுந்தீவன உற்பத்தி, பால் பொருட்கள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, சாண எரிவாயு உற்பத்தி ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களால் நடத்தப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் அலுவலக போன் எண்ணில், (04324294335 ) தொடர்பு கொள்ளலாம்.  முன்பதிவு செய்பவர்கள், ஆறு நாட்களும் தவறாமல் பயிற்சி மையத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *