தர்பூசணி சாகுபடி இலவச பயிற்சி

வீரிய ஒட்டுரக தர்பூசணி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் விற்பனை நிலையத்தில், வரும், 2015 ஜனவரி 22ம் தேதி நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், வீரிய ஒட்டுரக தர்பூசணி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி நடக்கிறது. அதற்காக, தர்பூசணியில் உள்ள உயர்ரகங்கள், நாற்றங்கால் மேலாண்மை, நடும் பருவம், நடவுமுறை, பாலீதின் நிலப்போர்வை, சொட்டுநீர்பாசனம், நீர்வளி உரமளித்தல், உர நிர்வாகம், களை நிர்வாகம், ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்தல், பூச்சி நோய் தடுப்பு நிர்வாக பயிற்சி ஆகியன இலவசமாக வழங்கப்படும். எனவே, பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், வரும், 2015 ஜனவரி   20ம் தேதிக்குள், 04286 – 266 244, 04286 -266 345 என்ற எண்களில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *