நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இந்தி யன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனை வோர் பயிற்சி மையத்தின் நிதியுதவியுடன் லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி 2014 அக்டோபர் 27ம்தேதி முதல் 2014 நவம்பர் 1ம்தேதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் அறிவியல் ரீதியான பராமரிப்பு முறை கள், கொட்டகை அமைப்பு, தீவன பராமரிப்பு, நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறை கள், மர புசாரா மருத்துவ முறைகள், குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல், விற்பனை உத்திகள் மற்றும் பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக் கழக பேராசிரியர்களால் நடத்தப்படவுள்ளது.
பயிற்சியாளர்களுக்கு கையேடு, தேநீர் மற்றும் மதிய உணவும் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அலுவலக தொலை பேசி எண்ணை (04324294335) தொடர்பு கொ ண்டு விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் 6 நாட்களும் தவறாமல் பயிற்சி மையத்திற்கு வர வேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

  1. செல்வ சுந்தர் says:

    திருவாரூர் பக்கம் இந்த பயிற்சி நடந்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply to sathish Cancel reply

Your email address will not be published. Required fields are marked *