நாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி

2016 மார்ச் 23ம்தேதி மற்றும் 24ம்தேதிகளில் நாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு” குறித்து இரண்டு நாள் பயிற்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பேராசிரியர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 2016 மார்ச் 23ம்தேதி மற்றும் 24ம்தேதிகளில் “லாபகரமான நாட்டுக்கோழி, மற்றும் வாத்து வளர்ப்பு” குறித்து இரண்டு நாள் பயிற்சி நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் கோழி வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, தீவன பராமரிப்பு, நாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், மரபுசார் மருத்துவ முறைகள், குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல், விற்பனை உத்திகள், பண்ணை பொருளாதாரம் குறித்த தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு அத்துடன் களப்பயிற்சியும் வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் காலை 10.30மணிக்கு பயிற்சி மைய வளாகத்திற்கு நேரில் வர வேண்டும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், தொலைபேசி எண் 04324294335 மற்றும் 07339057073 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி தினமும் காலை 10.30மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *