காஞ்சிபுரம் ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையத்தில் வருகிற 10-ஆம் தேதி ஒருங்கிணைந்த மண் வள மேம்பாடு மூலம் பசுந்தீவனம், கால்நடை உற்பத்தி திறனை பெருக்குதல் குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து பயிற்சி மையத்தின் தலைவர் வீரமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உழவர் பயிற்சி மையம் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் இயங்கி வருகிறது.
இங்கு ஒருங்கிணைந்த மண் வள மேம்பாடு மூலம் பசுந்தீவனம், கால்நடை உற்பத்தி திறனைப் பெருக்குதல் குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 2015 ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இருபாலர்களும் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் 04427264019 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்