பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2015 அக். 27 ஆம் தேதி விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது என்றார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) சி. கதிரவன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு 2015 அக். 27 ஆம் தேதி மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம், மண்புழு உரம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள், மண்புழு உரம் தயாரிக்க ஏற்ற பொருள்கள், குழிமுறை மற்றும் வர்த்தக ரீதியாக குவியல் முறையில் மண்புழு உர உற்பத்தி, மண்புழு உரம் பிரித்தெடுத்தல், மண்புழு உரத்தின் பயன்கள், உர சிபாரிசுகள் ஆகியவை குறித்து காணொலி காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளது.
முகாமில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் நேரில் அல்லது 08939003569 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகளே பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்