பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைப்பது தொடர்பான இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், மண் புழு உரம் தயாரிப்பது தொடர்பான இலவச பயிற்சி 2013 ஜூலை 9 ஆம் தேதியும், வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பான இலவச பயிற்சி 2013 ஜூலை 10 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மண் புழு உரம் தயாரிப்பு பயிற்சியில், மண் புழு உரம் தயாரிக்கும் முறைகள், மண் புழுவின் வகைகள், மண்புழு குளியல் நீர் தயாரிக்கும் முறைகள், பண்ணைக் கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உரத்தை சலித்துப் பிரிக்கும் முறை ஆகியவை குறித்தும், வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பான பயிற்சியில் தோட்டம் அமைக்கும் முறை, பராமரிப்பு மற்றும் பயன்கள், அதன் முக்கியத்துவம், பருவம் சார்ந்த காய்கறிப் பயிர் தேர்வு ஆகியவை குறித்த பயிற்சிகள் காணொலி காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் முகவரியை வேளாண் அறிவியல் மையத்தில் நேரில், அல்லது 04328293592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்