மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் மற்றும் களப்பயிற்சி

மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் மற்றும் களப்பயிற்சி

பயிற்சி நடைபெறும் நாள் : டிசம்பர் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 400

முகவரி :

அந்தோனிசாமி மரச்சோலை,
வீரமுடையார் கோவில்,
வு.N. புதுக்குடி, புளியங்குடி,
தென்காசி,
திருநெல்வேலி மாவட்டம் – 627855.

முன்பதிவு செய்ய : 9442590069, 9442590068

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

  • இந்த பயிற்சியில் தண்ணீர் இல்லாமல் மானாவாரியிலும் மரப்பயிர் சாகுபடி செய்யும் முறை, தண்ணீர் பற்றாக்குறைவினால் பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்ய இயலாதவர்கள், வருடாந்திர பயிர்சாகுபடி செய்வதற்கு நேரமில்லாதவர்கள் மற்றும் பல காரணங்களால் நிலத்தை தரிசாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, வேளாண் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வேலியோரம் மற்றும் வரப்புகளில் மரப்பயிர் நடவு செய்ய முறைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
  • அதுமட்டுமல்லாமல் மரப்பயிர்களில் மிளகு சாகுபடி செய்து லட்சங்களில் வருமானம் குவித்து வரும் மிளகு விவசாயிகள் கலந்து கொண்டு அனுபவ உரை நிகழ்த்த உள்ளனர்.
  • அதை தொடர்ந்து மரப்பயிர்களில் ஊடுபயிராக மிளகு மற்றும் வருமானம் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி குறித்த அனுபவப் பகிர்வு, மரங்களின் விலை மதிப்பு குறித்த அனுபவப் பகிர்வு போன்றவை குறித்து வல்லுநனர்கள் பேச உள்ளனர்.
  • பின்னர் மரங்களை அரசாங்கத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் மற்றும் மர அறுவடையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விளக்கம், மண்ணுக்கேற்ற மரங்கள், குறைந்த தண்ணீரில் மரம் வளர்ப்பு, மரங்களின் சீரான வளர்ச்சி குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
  • களைக் கட்டுப்பாடு முறைகள் போன்ற நுட்பங்கள் குறித்தும், வல்லுநர்களின் அனுபவப்பகிர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் மரப்பயிர் விவசாயிகள், மிளகு விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள், மரக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *