மூலிகை பயிர்கள் சாகுபடி சென்னையில் பயிற்சி

மூலிகை பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னையில் அண்ணா நகரில் இயங்கும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மூலிகை பயிர்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி, 2018, பெப்ரவரி 22ல், பயிற்சி மையத்தில் நடக்கிறது.

இப்பயிற்சியானது, நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், நல்ல வாய்ப்பாக அமையும்.

இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 0442626 3484 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய வேண்டும். காலை, 9:30 – மாலை, 4:30 மணி வரை பயிற்சி நடைபெறும்.

இதில் பங்கேற்போருக்கு பயிற்சி கையேடு, குறிப்பேடு, சான்றிதழ் வழங்கப்படும்.

நன்றி:  தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *