வேளாண் பொருள்களை பதப்படுத்த இலவச பயிற்சி

சென்னை கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொருள்கள் பதப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வேளாண் பொருள்களைப் பதப்படுத்துல், சந்தைப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி வரும் 2013 ஜூலை 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

பயிற்சியில் படித்த, படிக்காத இளைஞர்கள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். வயது வரம்பு, கல்வித் தகுதி இல்லை. பயிற்சியின்போது, மதிய உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

வரும் 2013 ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் விவரங்களுக்கு 09444155312 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *