இயற்கை விவசாயத்தில் பருத்தி பூச்சி கட்டுப்பாடு

பருத்தி பயிரை தான் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. பருத்தி பயிரில் தான் அதிக அளவில் ரசாயன பூச்சி மருந்துகள் பயன் படுத்த படுகின்றன


இந்த பயிரில் இயற்கை முறையில் பல மாநிலங்களில் எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துகிறாரகள் பார்ப்போமா?

 • கைவினை முறை சாணி கொண்டு பூஞ்ச நீக்கம் செய்து, பூச்சியினால் சேதாரம் அடைந்த விதைகளை நீக்குதல், செடியில் புழுக்களை கையில் சேகரித்தல் அழித்தல், சேதாரம் அடைந்த பயிர் பாகத்தை நீக்குதல்.
 • பயிர்சுழற்சி முறை வயலில் களைகளை நீக்கி எப்போது சுத்தாக வைத்தல், ஊடுபயிர்  / கலப்பு பயிராக சோளம், மக்காச்சோளம், பச்சைப்பயிறு, உளுந்து போன்றவற்றை வளர்த்தல். முக்கிய பூச்சிகளுக்கு எதிரியாக உள்ள பூச்சிகளை பாதுகாத்தல்
 • தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பிலைசாறு, வேப்பங்கொட்டை சாறு தெளித்தல்.
 •  நன்கு புளித்த மோரையோ அல்லது நொதித்த கோமியத்துடன் வேப்பங்கொட்டை சாறு கலந்தோ அல்லது மண்ணென்ணெயை தெளித்தால் பூச்சிகளின் கூட்டு சேதாரத்தைக் கட்டுப்படுத்தலாம் (மத்தியப்பிரதேசம்).
 • பருத்தியில் ஏற்படும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லிகள் அல்லாத பிற முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை 25 சதவீதம் குறைப்பதோடு அதிக லாபத்தையும் ஈட்ட, கோடையில் ஆழ் உழவு செய்தல்  ஒளி பொறி வைத்தல், நுனிக் கிள்ளுகதால் புள்ளி காய்ப்புழுவின் முட்டை, புழுக்களை அகற்றுதல். சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்புள்ள இரகங்களை தேர்வு செய்து நடுதல், 5 சதவீதம் வேப்பங்கொட்டை பருப்பு சாறு அடித்தல், புகையிலை சாறு தெளித்தல், மிளகாய் – பூண்டு கரைசல் தெளித்தல். சாணி மற்றும் கேமியம் கரைசல் தெளித்தல், பறவைகள் பூச்சி புழுக்களை பிடிக்க வகைச்செய்தல், பூச்சித் தாக்கிய காய்களை சேகரித்து ஆழித்தல் போன்ற முறைகளைக் கையாளலாம்.
 • பருத்தி வெள்ளை ஈயைக்கட்டுப்படுத்த பேப்பர் கழிவுகளை ஆமணக்கு எண்ணெய் அ்லது ‘கிரீஸ்’ பெடரோல் கழிவு எண்ணெயில் தோய்த்து, வயலில் இடவேண்டும். பின் தெளிப்பான், கொண்டு செடி மீது காற்றை தெளித்தால், செடியின்  சாற்றைப் பூச்சியான வெள்ளை ஈ, செடியிலிருந்து விடுபட்டு, எண்ணெய் பேப்பர் கழிவின் மேல் ஒட்டிவிடும்.  இவ்வாறு செய்தால்  90 சதவீதம் வெள்ளை ஈயை வெற்றிகரமாக குறைக்கலாம் (பாண்டிச்சேரி).
 • பருத்தியில்,  தாய் பூச்சிகளைக் கவர்ந்து, அழிக்க, 500 கிராம், சர்க்கரையை சமையல் எண்ணெய் கலந்து நொதிக்க வைத்து, அந்தக் கலனில்  சமையல் எண்ணெய் சிலதுளி சேர்த்து, வயல்களில் பருத்தி வரிசைக்கு ஊடே வைத்தால், அக்கரைசலில் வாடாமல் பூச்சி கவரப்பட்டு அதில் விழுந்து அழிந்துவிடும்.
 • பருத்தியைப் பாதிக்கும் புழுக்களை எருக்கலை பாலைத் தண்ணீருடன் 1:15 விகிதத்தில் கலந்து தெளித்தால், 3 நாட்களில் திறம்பட கட்டுப்படுத்தும்  இத்தெளிப்புக்கு பின்பு வரும்  தளிர்களில் புழுத்தொல்லை இராது (குஜராத்).
 • பருத்தியில் பச்சைக்காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த, 250-300 கிராம் ஊமத்தை இலையுடன் கூடிய தண்டினை 1 லிட்டர் சூடான நீரில் போட்டு வைத்து, பின் அந்தத்தண்ணீர் குளிர்ந்தவுடன்ள நீரை எடுத்து அதில் 15 லிட்ட் தண்ணீர் சேர்த்து தெளித்தால் 6-7 மணி நேரத்திற்கு பூச்சித் தாக்குதல் குறையும். இவ்வாறு ஒரு மாதம் ஆனசெடிக்கு செய்தால் நல்ல கட்டுப்பாட்டைத் தரும் (குஜராத்).
 • பருத்தியில் சிவப்புப் புள்ளி நோயைக் கட்டுப்படத்த, அது ள தோன்றும் போதோ அல்லது முன் தடுப்பாகவோ நீர்த்த மோரை, பயிர் மீது தெளித்தால், போதும் (குஜராத்).
 • பருத்தியில் வெள்ளை ஈக்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 30 கிராம் / 15 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துக் கலவைக்கு என்ற அளவில் புகையிலைத் தூளைக் கலந்து அடிக்கலாம் (குஜராத்).
 • பருத்தி வயலைச்சுற்றி 2-3 வரிசை வெண்டைப் பயிரை நட்டால், பருத்தி தாக்கும் புள்ளிக் காய்ப்புழு, படைப்புழு, தத்துப்பூச்சி முதலில் வெண்டையைத் தாக்கும் எனவே அந்த வெண்டையைப் பிடுங்கி  அழிப்பதால் பருத்தியை பூச்சித் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
 • பருத்தி காய்ப்புழு, கொண்டைக்கடலை மற்றும் துவரை காய்த் துளைப்பானைக் கட்டுபடுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிக்கலாம்.
 • பருத்தியை புழுக்களை அழிக்க, மண்ணெண்ணெயை அரவில் பருத்தி  வயலில் அடிப்பதால் , இரவில் ளஉண்ணும் புழுக்களை அழிக்க முடியும். மேலும் அவை பகலில் நிலத்தில் அடிக்கு  போகிறது, மண்ணெண்ணெய் கலனை நீர்ப்பாசனம் செய்யும்போது, அந்த வாய்க்காலின மீது இருக்கும்படி அனைத்து பகுதிகளுக்கும் சென்று, தெளிப்பதைக் காட்டிலும் ள அதிகமாக புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் நன்மை செய்யும் சில நிலத்தில்  வாழும் ள புழுக்களையும் அழித்துவிடுகிறது (குஜராத்).
 • அரளி விதையை / காய்களை இடித்து, இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தண்ணீர் சேர்த்து பருத்தி வயலில் தெளிப்பதால் 70 சதவீதம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
 • பருத்தியில், 1 கிலோ சர்க்கரையை 12 லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி (கனமாக பருத்தி துணிக்கொண்டு), தெளித்தால், சிறிய பூச்சியான வெள்ளை ஈ, அதன் முட்டைமீது ஒட்டிக்கொண்டு விடுவதால், அவை கொல்லப்படுகின்றது. ஏக்கருக்கு 56 லிட்டர் கரைசல் தேவைப்படுகிறது. அம்முறை ஒரே ஒரு மறை மட்டுமே நவம்பர் – டிசம்பர் மாதங்களில் செய்யப்படுகிறது. ஏனெனில் அக்கரைசல்  ‘மதியா’  நோய் ஏற்பட காரணமாகிறது.
 • புகையிலை இலை / விதை, வேப்பங்கொட்டை / வேப்பிலையை தண்ணீர் ள போட்டு கொதிக்க வைத்து, தெளித்தால் பருத்தியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 • 20-25 கிலோ சாதாரண உப்பை, இயற்கை உரம் 10 வண்டியோடு கலந்து, பருத்தி சால்களில் இட்டால், செடிகளுக்கு பூச்சி எதிர்ப்புச் சக்தி உருவாக்கி, மகசூல் 3ல் ஒரு பங்கு அதிகரிக்கும் (குஜராத்).
 • விவசாயிகள், பசுமாட்டு சாணத்தை வீட்டில்  வளர்க்கும் மாடுகளிலிருந்து பெற்று உரமாக பயன்படுத்தகிறார்கள். அவ்வாற மாட்டு கொட்டிலுக்கு உள்ளேயும், வெளியேயும் சேகரிக்கும் சாணத்தை தாழ்ந்த பகுதிகளில் வீட்டிற்கு வெளியே மொத்தமாகவோ , உயர்ந்த பகுதி ஏனில். நேரடியாக வயலிலும்  குவியலாக சேமிக்கலாம். அதை மணல் சாந்துகொண்டு மூடிவைத்தால் காற்றினால் அவை பறக்காமல் இருக்கும். பின்பு வயலுக்கு மூங்கில் கூடைகளில் அள்ளி மனிதர்களோ, குதிரைகளைக் கொண்டு வயலில் சேர்க்கும். அப்படிப்போக ஏக்கருக்கு  125-250 குவிண்டால் எரு தேவைப்படும். விவசாயிகள் ஆட்டு எருவை விட  மாட்டு எருவையே அதிகம்  இடுகிறார்கள். ஏனென்றால் ஆட்டு எரு, அதிக அளவு தழை (3 %),மணி (1 %), சாம்பல் (2 %), சத்துக்களை கொண்டதால் அதிகம் இட்டால் பயிர்களை எரித்துவிடும் / காயவைத்து விடும் (இமாச்சலபிரதேசம்).
 • பருத்தி விதைக்கு உள்ள பஞ்சை நீக்க விதைப்புக்கு ஒரு நாள் முன்பு, தகுந்த அளவு எடுத்து, கரைத்து / சேர்த்து, அதை விதை மீது தெளிக்கவேண்டும். பின்  அவ்விதைகளை தேய்த்தால் நன்றாக கலவை ஒட்டிக் கொள்ளும். பின அதை நிழலில் உலரவைத்து, முளைக்க பயன்படுத்தினால் சுலபமாக விதைக்க முடிவதோடு அல்லாமல் நல்ல முளைப்பு திறனுடனும் 10 சதவீதம் கூடதல் மகசூலையும் தரும் (மகாராஷ்டிரா).
 • காரிப் பருவத்தில் மகாராஷ்டிராவில் பருத்தியும், கம்பும் பயிரிட்டு வந்தனர். பின் பருத்தி பயிரிடும் பரப்பு அதிகமானதால், உணவுக்கும் தீவனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகள் காரீப் பருத்திக்கு ள பின் ஜனவரி மாதத்தில் ள அதிக அளவு (இரண்டு மடங்கு) கம்பு விதையை பயன்படுத்தி, சாகுபடி செய்ததில் அதிக மகசூலும், பூச்சி நோய்த் தாக்காத தரம் வாய்ந்த கம்பும் தீவன தட்டையும் கிடைத்தது.
 • பருத்தியை, மழை வரும் காலத்திற்கு ( 8-10 நாட்களுக்கு) முன்பே, விதைத்தால், போதியளவு  மழைக் கிடைத்தவுடன் முளைக்கத் தொடங்கி 10 சதவீதம் மகசூலை தரும், போதிய அளவு மழைக் கிடைக்காவிடில் திரும்ப விதைக்க வேண்டி வரும். இதைப்போல், நெல், துவரை, வறட்டு விதைப்பு செய்யலாம்  (மகாராஷ்டிரா).
 • விவசாயிகள் போதியளவு நீர்ப்பாசன வசதி இருந்தால், 3-4 ளபருத்தி பஞ்சு எடுத்தபின், மறுதாம்பு பயிராக விட்டு, உரமிட்டு, 2-3 நீர்க்கட்டியினால், எக்டருக்கு 10-15 குவிண்டால், அதிகமான விளைச்சல் கிடைக்கும் (மகாராஷ்டிரா).
 • ஆழமான கருமண்ணில் புன்செய்ப் பயிராக மழைக்காலத்தில் பயிரிடும் பருத்தி நவம்பர் மாதங்கள் வரை மகசூல் தருகிறது. ஆனால் தற்சமயம் மழையானது நவம்பர் – டிசம்பர் மாதங்களில் பெய்வதால், புதிய தளிர்கள், கிளைகள், பூக்கள், காய்கள் விடுகிறது, எனவே களையெடுப்பு மட்டும் செய்தால், பூக்கும் பூக்கள் 2 மாதங்களில் காயாக வெடித்து மட்டும் செய்தால், பூக்கும் ஒரு எக்டருக்கு  கிடைக்க வாய்ப்புண்டு.
 • பருத்தி பயிருடன் சோளமும் கலந்து கலப்புப் பயிராக விதைத்தால், சோளப் பயிரை உண்ண வரும் பறவைகள், பருத்தி செடியில் உட்காரும் பூச்சிகளைச் சேர்த்து  தின்றுவிடும் (மகாராஷ்டிரா).
 •  பிளாஸ்டிக் கலனில் மாவை 200 லிட்டரில் கலந்து, அப்படியே உரக்குவியலுக்கு அடியில் 8 நாட்கள் வைத்திருந்தால் நன்கு புளித்துவிடும். அதை பயிருக்கு பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
 •  பூண்டினை இடித்து தண்ணீரில் போட்டு, அதை வடிகட்டி அத்துடன் மானோகுரோட்டாபாஸ் கலந்து தெளித்தால் பருத்தி காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம் (மகாராஷ்டிரா).
 • பருத்தி செடிக்கு சிறிதளவு சர்க்கரைப் போட்டால், எறும்புகள் அதிகமாக வரும். பருத்தியைச் சேதப்படுத்தும்  அசுவினி, காய்ப்புழுக்களை அதிக அளவு செலவில்லாமல் எந்த தொழில்நுட்ப வேலையும் இல்லாமல் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
 • புகையிலையை இரவு முழுவதும்  நீரில் ஊறவைத்து வடிகட்டி தெளித்தால் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் (மகாராஷ்டிரா).
 • 500 கிராம் பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் அரைத்து சாறு எடுத்து அதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, 200 கிராம் சோப்பு  சேர்ந்து, தெளித்தால் பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளுடன் மற்ற  பூச்சிகளும் கட்டுப்படுத்தலாம்.
 • பருத்தி, மிளகாய், வெங்காயம் இவற்றில் காய்ப்புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 5 கிலோ வேப்பங்கொட்டையை வெயிலில்  காய வைத்து, தூளாக்கி 10 லிட்டர் தண்ணீரில்  இரவு முழுவதும் ஊறவைத்து 90 லிட்டர் தண்ணீரும் 500 கிராம் சோப்பை ஒட்டுத் திரவமாக சேர்த்து தெளிக்கலாம்.
 • பருத்தி மற்றும் காய்கறிப் பயிர்களில் அசுவின், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, சாம்பலை தூவலாம். பின் பசுமாட்டு கோமியம் மண்ணெண்ணெயை, சோப்பு தூளாக்கி கலந்து தெளித்து மேற்கண்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் (மகாராஷ்டிரா).
 • உணவுத் தானியங்களைச் சேமிக்க, மூங்கில், பருத்தி குச்சியிலான கலன்களைத் தயாரித்து, அதில் இட்டு பின் காற்று புகாதவாறு மண், சரணி சாந்தைப் பூசி சேமித்தால், அதிக நாள் கெடாமல் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்கும். கலனில் வேப்பிலையைத் தானியத்துடன் கலந்தும் வைக்கலாம் (மகாராஷ்டிரா).
 • விதைகள் மீது சாணி, மண் இவற்றை சம அளவுக் கொண்ட சாந்தைத் தெளித்து பின் விதைகள் மீது சாந்து நன்றாக படும்படி தரையில் தேய்த்து, விதைகளை காய வைத்து விதைக்கப் பயன்படுத்தலாம். சுலபமாக ள விதைக்க மூடியும், அத்துடன் விதைகள் நன்கு முளைத்து அதிக மகசூல் தரும் (மகாராஷ்டிரா).
 • பல்வேறுபட்ட பயிர் இனங்களைக் கலந்து பழங்காலத்திலிருந்து விதைத்து வருகிறார்கள். அதனால் பூச்சி நோய்களுக்கு  குறைகிறது. மக்காச்சோளம், செண்டுமல்லி – நூற்புழு எண்ணிக்கை குறைகிறது. தக்காளி, சணக்கு – தக்காளி மகசூல் கூடுகிறது. நெல், பூண்டு, மக்காச்சோளம், தக்காளி – நூற்புழு எண்ணிக்கை குறைகிறது. நெல், புகையிலை, நெல் – வேர் முடிச்சு நூற்புழு கட்டுப்படும். சூரியகாந்தி + பருத்தி – இலை தத்துப்பூச்சி சேதாரம் குறையும். சோளம் + தட்டைப்பயிறு (1:1) –  சோளம் தண்டு துளைப்பான் கோதுமை + கொண்டைக்கடலை (1:1) – காய்  துளைப்பான் தாக்குதல் குறையும் ஆமணக்கு + தட்டைப்பயிறு –  அசுவினி தாக்குதல் குறையும்.
 • பருத்தி விதையை ராகி, கம்பு பயிருக்குமுன் உழவு செய்யாமல், நேரடியாக  தண்ணீர் விட்டவுடன் கையினாலே விதைக்கலாம். (கோயமுத்தூர்).
 • பச்சை புகையிலை 1-5 – 2.0 கிலோ எடுத்து 5-6 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, நல்ல அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். அதில் 4-5 லிட்டர் வடிகட்டிய நீருடன் 70-80 லிட்டர் நீர் சேர்த்து சோயாபீன்ஸ் ள (ப்சை காய் புழு தாக்கப்பட்ட பயிரில்) தெளித்தால் கட்டுப்படுத்தலாம். இதுபோல் 5-6 நாட்கள் இடைவெளி விட்டு செய்யவேண்டும்.
 • அசுவினி தாக்கப்பட்ட பயிர்களில் வேப்பங்கொட்டை சாறு அல்லது பூச்சிக்  கொல்லும் இலைகளின்சாற்றை தெளிக்கலாம் (உத்திராஞ்சல்).
 • பருத்தியுடன் சுற்றி ஏக்கருக்கு 100 ஆமணக்கு விதையை ஊன்றி வளர்த்தால், படைப்புழுவானது அகன்ற இலையான ஆமணக்கு இலையில் முட்டையிட்டும் பின் அந்தப் புழுக்கள், ஆமணக்கு இலையை சேதப்படுத்தும் / உண்ணும் ள அத்தகைய இலைகளை பிடுங்கி அழிப்பதில்  பருத்தி செடி பாதுகாக்கப்படுகிறது (ஆந்திரப்பிரதேசம்).
 • பருத்தியில் பூச்சித் தாக்குதலுக்கு, 500 கிராம் வேப்பங்கொட்டை, 100 கிராம் புகையீலை, 100 கிராம், 250 கிராம் பெருங்காயம்  50 கிராம்  விதைகளை  இடித்து சாறு எடுத்து ஒரு ஏக்கருக்கு தெளித்தால் பருத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்ததலாம் (தமிழ்நாடு).
 • கோமியம் மற்றும் பசுமாட்டு சாணம் இவற்றை தண்ணீர் கரைத்து, சில நாட்கள் வைத்திருந்து வடிகட்டி, தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சகளும், இலைவெட்டி  பூச்சியும் கட்டுப்பட்டு, பயிர் நன்கு  வளரும் (சாணி – சத்துக்கள் கொடுக்கவும்) கோமியம் – பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது (கர்நாடகா).
 • பருத்தி, மிளகாய், எலுமிச்சையில் ஏற்படும் பூஞ்சாணங்களைக் கட்டுப்படுத்த, பஞ்சகாவ்யாவை தயாரித்து (5:2:1/2:2: 1/2 – பால், தயிர், நெய், கோமியம், சாணி என்ற விகிதத்தில் 10 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, 7 நாட்கள் வைத்திருந்து தெளிக்கப்பயன்படுத்துதல்) தெளிக்கலாம். இதனால் மேலும் இலை உதிர்வதும் தடுக்கப்படுகிறது. பூக்கள் நன்றாக காய் பிடிக்க செய்கிறது (தமிழ்நாடு).
 • பெரிய கும்முட்டிகாய், பிரண்டை கொடி, மஞ்சள் அரளி விதை, வேப்பங்கொட்டை இவற்றை அரைத்து, விழுது தயாரித்து அப்படியே 10 நாட்கள் வைத்திருக்கவேண்டும். அத்துடன் 10 நாள் ஆன தக்கைப் பூண்டு அதைதத விழுதையும் சேர்த்து, மெல்லிய துணியினால் வடிகட்டி, அதில் தண்ணீர் சேர்த்து  தெளித்தால் பருத்தியை தாக்கும் வெட்டுப்புழுவை திறம்பட எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் கட்டுப்படுத்தலாம் (தமிழ்நாடு).

நன்றி:TNAU


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *