பருத்தியில் இலைவழி உரம்

  •  பருத்தி செடி முளைத்து சுமார் 30 நாட்களான இளம் பருவத்திலும், காய் முதிர்ந்த நிலையிலும் செம்பட்டை எனப்படும் சிவப்பு இலைகள் தோன்றக்கூடும்.
  • இது மக்னீசியம் பற்றாக்குறையினால் ஏற்படுகிறது.
  • வயலில் தண்ணீர் தேங்குவதாலும், மண்ணில் சாம்பல் சத்து அளவு அதிகரிக்கும் போதும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
  • மேலும் இலைகளில் நரம்புகள் பசுமை நிறத்துடனும், நரம்புகளுக்கு இடையிலுள்ள பகுதிகள் செந்நிறமாகவும் காணப்படும்.
  • முற்றிய நிலையில் இலைக்காம்பு தண்டு சிவப்பாக காணப்படும். இதனால் பருத்தியின் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறைகிறது.
  • இதனை நீக்க 500 கிராம் மக்னீசியம் சல்பேட்டையும் 100 லிட்டர் நீரில் கரைத்து இலைகளின் மீது நன்கு நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *