பருத்தியில் நுண்ணூட்ட சத்துக்கள

விவசாயிகள், பருத்தியில் அடியுரமாக நுண்ணூட்ட சத்துக்களின் முக்கியத்துவம் அறிந்து இட வேண்டும் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) கதிரவன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 • மானாவாரி பீ.டி பருத்தி சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • ஒருசில பகுதிகளில் அடியுரம் இட்டும்,சட்டிக் கலவை உழவுடன் அடியுரம்இடாமலும் பருத்தி சாகுபடி செய்ய நிலங்கள் தயார் நிலையில் உள்ளன.
 • இந்த சூழ்நிலையில் பருத்தி சாகுபடிக்கு அடியுரமாக நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவது மிகவும் அவசியமாகும்.
 • நுண்ணூட்டச் சத்துக்கள் என்பவை துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, போரான், மெக்னீசியம், மாலிப்டினம், கால்சியம் மற்றும் சல்பர் ஆகியவை அடங்கும்.
 • இவை பருத்தியின் சீரான வளர்ச்சிக்கு மிக குறைந்த அளவே தேவைப்படுகின்றன. ஆனால், பேரூட்ட சத்துக்களான யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகியவற்றை மட்டுமே அதிகளவில் இட்டு மண்ணில் நுண்ணூட்டச் சத்துக்கள் இல்லாத தன்மையை உருவாக்கப்படுகிறது.
 •  இதனால், பருத்தி செடியில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளான மெக்னீசியம் சத்து, போரான் சத்து குறைபாடு ஏற்பட்டு மகசூல் குறைகிறது.
 • மேலும் சிகப்பு இலை நோய், சப்பைக் கொட்டுதல், செடி சரியான வளர்ச்சியற்ற தன்மை உள்ளிட்டவை நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினால் மட்டுமே ஏற்படுகின்றன.
 • இவற்றை நீக்க, பருத்தி விதை நடவு செய்வதற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ என்றளவில், பருத்திக்கான நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதை நடவுக்கு முன்னதாக வயலில் சீராக தூவி விட வேண்டும்.
 • அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பருத்தி நுண்ணூட்டக் கலவையை, ஒரு ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவில் 30 கிலோ மட்கிய தொழு எருவுடன் கலந்து, 30 நாள்களுக்கு கோணிப்பைக்குள் வைத்து ஊட்டமேற்றிய பின், வயலில் விதை நடவுக்கு முன் சீராக தூவ வேண்டும்.
 • மேலும், நுண்ணூட்டச் சத்துக்களை பேரூட்டச் சத்துக்களான யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றுடன் கலந்து இடக்கூடாது.
 • நுண்ணூட்டச் சத்துக்கள், பருத்தி செடியின் சீரான வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமின்றி பேரூட்டச் சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ள உதவும் பணியை செய்கின்றன.
 • எனவே, பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அடியுரமாக நுண்ணூட்டச் சத்துக் கலவையை இட்டு பயன்பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரில் அல்லது முதுநிலை ஆராய்ச்சியாளர் பி.சரவணனை 09944244582 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *