பெரம்பலூர் மாவட்டம்,தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் சார்பில், பருத்தி பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து, ரோவர் வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை மூத்த பேராசிரியர் ராஜீ பேசியது:
பல்வேறு கிராமங்களில் பருத்தி பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அஸ்வினி பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால், பருத்தி பயிரில் பாதிப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இவற்றை கட்டுப்படுத்த மாலை நேரங்களில் விளக்கு பொறி வைப்பதுடன், 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும், சாறு உறிஞ்சும் பூச்சுகளின் நடமாட்டத்தை தடுக்க ஏக்கருக்கு 5 இடங்களில் மஞ்சள் விளக்கு ஒட்டுப்பொறியும், காய்ப் புழுக்களின் தாக்குதல் உள்ள இடங்களில் இனக் கவர்ச்சிப் பொறியும் வைத்து கட்டுபடுத்தலாம் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்