பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் பருத்தியில் புழு தாக்குதல் குறித்து வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில், 36 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் வீரிய ஒட்டு ரக பருத்தி மானாவாரியாக பயிரிடப்பட்டு, தற்போது, காய் பிடிக்கும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டாரத்தில் பருத்தி செடியில் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக, வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.வேளாண்மை உதவி இயக்குநர் கீதா கூறியது:
- பருத்தி பயிரில் புரோடீனியா புழுக்களின் தாக்குதல் காணப்படுகிறது.
- இதன் தாக்குதல் அதிகமாவதற்குள் விவசாயிகள், பருத்தி வயல்களில் விளக்குப் பொறிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து, தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்க வேண்டும்.
- இலைகளில் உள்ள முட்டைகள், இளநிலை புழுக்களை வயலில் இருந்து சேகரித்து, அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
- மேலும், ஒரு ஏக்கருக்கு தயோடி கார்ப் 72 டபல்யூ பி 400 கிராம் அல்லது, குளோர்பைரிபாஸ் 20 இ.சி., 500 மில்லி அல்லது, குனைல் பாஸ் 25 இ.சி., 500 மில்லி இவற்றில், ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை ஒட்டும் திரவத்துடன் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்