பரங்கி ரக கத்திரிக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதி காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண் நிலத்தில், பரங்கி ரக கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளேன்.
இது, நம்மூர் மண்ணுக்கு அனைத்து வித நாட்டு கத்திரிக்காய்களும் அருமையாக மகசூல் கொடுக்கிறது. ஒவ்வொரு காயும், 300 கிராம் மகசூல் கொடுத்தாலும், அதிக எடை கிடைக்கிறது. இதை, சாகுபடிக்கு விரிவுபடுத்த விதைக்கு உற்பத்திக்கு எடுத்து வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.குகன், 9444474428
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்