90 நாளில் பலன்தரும் பறங்கிக்காய்!

தோட்டக்கலைப் பயிர்களில் பறங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதன் தொழில்நுட்ப முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Courtesy: dinamani
Courtesy: dinamani

 பறங்கிக்காய் வகைகள்:

கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி, சந்தன் வகை சிறந்தவை.
 மண்:

அங்ககத் தன்மை கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 சதம் முதல் 7.5 சதம் வரையிலுள்ள மண் ஏற்றது.
 பருவம்:

ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி ஆகியவை ஏற்ற பருவங்கள்.
 விதை அளவு:

ஹெக்டேருக்கு 1 கிலோ விதை தேவை.
 விதை நேர்த்தி:

விதைகளை இரு மடங்கு அளவு நீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்து 6 நாள்களுக்கு மூட்டமிடல் வேண்டும்.
 விதைத்தல்:

விதையை குழிக்கு 5 விதை என்ற வகையில் விதைக்க வேண்டும். நடவு செய்த 15 நாள்களுக்குப் பிறகு மெல்லிய நாற்றுகளை குழிக்கு 2 என்ற அளவில் நடவு செய்யவும். குழிகள் 30 செமீ-க்கு 30 செமீ என்ற அளவில் 2 மீ-க்கு 2 மீ. இடைவெளியில் தோண்ட வேண்டும்.
 உரமிடுதல்:

10 கி தொழுவுரம் (ஹெக்டேருக்கு 20 டன்) மற்றும் 100 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து 6: 12: 12 கலவையை அடியுரமாக அளிக்க வேண்டும். நடவு செய்த 30 நாள்களுக்குப் பிறகு நைட்ரஜனை குழிக்கு 10 கிலோ அளவில் இட வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியாவை ஹெக்டேருக்கு 2 கிலோ மற்றும் சூடோமோனஸ் ஹெக்டேருக்கு 2.5 கிலோ அதனுடன் 50 கிலோ தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிலோ என்ற அளவில் கடைசி உழவுக்கு முன் அளிக்க வேண்டும்.
 பின்செய் நேர்த்தி:

வளர்ச்சி ஊக்கிகள் தெளிக்க உகந்த நிலையில் மூன்று முறை களையெடுக்க வேண்டும். நடவு செய்த 10 முதல் 15 நாள்களுக்குப் பிறகு எத்தரல் 250 பி.பி.எம் (10 லிட்டர் நீரில் 2.5மிலி) நான்கு முறை வார இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
 தரமான நாற்று உற்பத்தி:

உயர் தொழில்நுட்ப தோட்டக்கலையில், 12 வயது ஆரோக்கியமான நிழல் வலை குடில்களிலிருந்து பெறப்பட்ட நாற்றுகளை நடவுக்கு பயன்படுத்த வேண்டும். 98 செல்களைக் கொண்ட குழித்தட்டுகளில் நாற்றுகளை வளர்க்கலாம். நன்கு மக்கிய கோகோ கரிகளை பயன்படுத்தலாம். வாடிக்கையாக இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
 உரமிடுதல்:

ஹெக்டேருக்கு 60: 30: 30 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துகளை பயிர்க் காலம் முழுவதும் பிரித்து பயன்படுத்த வேண்டும். பாஸ்பரஸ் 75 சதவீதம் சூப்பர் பாஸ்பேட்டாக அடியுரமாக அளிக்கவும்.
 பூச்சிக் கட்டுப்பாடு:

பழ ஈ பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்கவும். வெயில் காலங்களில் ஈக்களின் எண்ணிக்கை குறைவாகவும், மழைக் காலங்களில் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். எனவே, அதன்படி விதைப்பு நேரத்தை சரிசெய்யலாம். மீன் உணவுப் பொறியைப் பயன்படுத்தலாம். மொத்தமாக ஹெக்டேருக்கு 50 பொறிகள் தேவைப்படும்.
 சாம்பல் நோய்:

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த டைனோகேப் 1 மிலி அல்லது கார்பன்டாசிம் 0.5 கிலோ என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
 அடிசாம்பல் நோய்:

அடிசாம்பல் நோயை மேன்கோசெப் அல்லது குளோர்தலானில் 2 கிலோ என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இரு முறை 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்கலாம்.
 அறுவடை:

பழங்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். அல்லது தண்டுகளில் பழங்களுக்கு பற்றின்மை குறையும்போதும் அறுவடை செய்யலாம். நன்கு முதிர்ந்த பழங்களை நடவு செய்த 85 முதல் 90 நாள்களுக்குள் அறுவடை செய்யலாம்.
நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *