நம் நாட்டிலுள்ள நீர்ப்பறவைகளில் மிகப் பெரியது கூழைக்கடா. பெண்ணைவிட ஆண் உடல் அளவில் பெரியது. பருமனான உடலைக் கொண்டிருந்தாலும், மற்ற பெரிய நீர்ப் பறவைகளைப் போல நீண்ட கால்கள் கிடையாது, குட்டையாகவே இருக்கும். அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.
ஆங்கிலப் பெயர்:
பழைய பெயர்:
மத்தாளிக்கொக்கு
அடையாளங்கள்:
சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். அலகிலும் அதன் கீழே ஓட்டியுள்ள பையிலும் கரும்புள்ளிகள் இருக்கும். மரக் கிளைகளில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும். நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள மரங்களில் மற்ற நீர்ப்பறவைகளுடன் கூடு கட்டும். தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
உணவு:
நீர்நிலைகளில் வாயைத் திறந்து தண்ணீருடன் மீன்களைச் சேகரிக்கும். மீன்கள் ஓரளவு சேர்ந்த பிறகு, நீரை வெளியேற்றிவிட்டு உண்ணும். கூழைக்கடாக்கள் சில நேரம் தண்ணீரில் அரைவட்ட வடிவமாகச் சேர்ந்துகொண்டு, இறக்கைகளை அடித்து மீன்களை ஒரு புறமாக ஒதுக்கும். பிறகு பிடித்துச் சாப்பிடும். ஓடுள்ள மெல்லுடலிகளையும்கூட உண்ணும். நீர்நிலைகளில் வாயைத் திறந்து தண்ணீருடன் மீன்களைச் சேகரிக்கும். மீன்கள் ஓரளவு சேர்ந்த பிறகு, நீரை வெளியேற்றிவிட்டு உண்ணும்.
தென்படும் இடங்கள்:
கூழைக்கடாக்கள் சில நேரம் தண்ணீரில் அரைவட்ட வடிவமாகச் சேர்ந்துகொண்டு, இறக்கைகளை அடித்து மீன்களை ஒரு புறமாக ஒதுக்கும். பிறகு பிடித்துச் சாப்பிடும். ஓடுள்ள மெல்லுடலிகளையும்கூட உண்ணும். உணவு: வேடந்தாங்கல், கூந்தன்குளம், பழவேற்காடு அண்ணாமலைச்சேரியில் இவை பெருமளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. சென்னையில் பள்ளிக்கரணையிலேயே இதைப் பார்க்கலாம்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்