வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் இடவசதியை அதிகரிக்கும் வகையில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
73 ஏக்கர் பரபரப்புள்ள ஏரியில் அடர்ந்த மரங்களுடன் காணப் படும் வேடந்தாங்கல் பறவைகள் சராணாலயத்தில் நிலவும் இதமான தட்பவெப்ப நிலை வெளிநாட்டு பறவைகள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. காஞ்சீவரம் மாவட்டத்தில் சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .இந்தியாவில் பழைமையான பறவைகள் சரணாலயம் இதுவே. ஆங்கிலேயர்களால் சரணாலயம் என்று 1858 ஆண்டே அறிவிக்க பட்டது
ஆண்டுதோறும் சீசனில் நைஜீ ரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன. மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டை யிட்டு குஞ்சு பொறித்து அவை களையும் அழைத்துக்கொண்டு தாய் நாட்டுக்கு திரும்புகின்றன. பறவைகளை ரசிக்க கடந்த சீசனில் 1.5 லட்சம் பேர் வந்துள்ளனர்.
இந்நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால் ஏரியில் தண்ணீர் குறைந்தது. இதனால் பறவைகள் வரத்தும் குறைந்தது. அதனால், கடந்த ஜூன் மாதம் சரணால யம் மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பறவைகளின் வருகையை உறுதிபடுத்தும் வகை யில் சீரமைப்பு பணிகளைத் தொடங்க சரணாலய நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி ஏரி யியை தூய்மைபடுத்துவது. ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, சரணாலய (பொறுப்பு) வன அலுவர் முரு கேசன் கூறும்போது, ‘சரணாலயம் அமைந்துள்ள ஏரியில் பறவைகள் கூடு கட்டுவதற்காக அமைந்துள்ள ஏராளமான மரங்கள் பல்வேறு இயற்கை காரணங்களால் பட்டுபோனது. இந்த மரங்களை அகற்றி, பறவை களின் இடவசதியை அதிகரிக்கும் விதமாக, ஏரியின் உள்ளே 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்ட மிடப்பட்டது. தற்போது, இந்த மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பறவைகள் கூடுகட்டுவதற்கு வசதியாக உள்ள கருவேலமரம் மற்றும் ஏரியின் ஈரப் பதத்தை தக்க வைக்கும் மரங்களான நீர்கடப்பன், மூங்கில் ஆகிய மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். ஏரியில் தண்ணீர் குறைவாக இருக்கும்போதுதான் மரக்கன்றுகள் நட முடியும். அதனால் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஏரியில் தண்ணீர் அதிகரிக்கும் போது மரக்கன்றுகள் பாதிப்பு இல்லாமல் வளரும் வகையில், ஏரியின் உள்ளே 4 அடி உயரத் துக்கு ஆங்காங்கே மண்கொட்டி அதன்மீது மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளதால், மரக்கன்றுகள் நீரில் முழ்காமல் நன்கு வளரும்.
இதனால், ஏரியின் உள்ளே மரங்களின் எண்ணிக்கை உயர்ந்து அடர்த்தியாக காணப் பட்டு, பறவைகளின் இடவசதி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள் ளது. மேலும், ஏரியில் ஏற்கெனவே உள்ள மரங்களில் கொடிகள் படர்ந்து காணப்படுவதால், பறவை களுக்கு இடையூறும் ஏற்படும் நிலை உள்ளது. அதனால், கொடி களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
நன்றி: ஹிந்து
அடுத்த சீசனில் பறவைகள் தேங்க்ஸ் சொல்லும்!!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்