மங்கோலியாவை சேர்ந்த ஒனன் என்ற குயிலினப் பறவை ஒன்று பல ஆயிரம் கிலோ மீட்டர்களை ஓய்வின்றி கடந்து இந்தியாவின்றி கடந்து இந்தியாவின் மத்தியப் பிரதேசம் வந்தடைந்துள்ளது.
பொதுவாக ஒரு பொருள் தரையில் செல்வதற்கும் புவியின் மேற்பரப்பில் செல்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளன. தரைவழியில் ஒரு தூரத்தை கடப்பதை காட்டிலும் ஆகாய மார்கமாக ஒரு தூரத்தை கடப்பது என்பது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் காற்றின் வேகம், புவியீர்ப்பு விசை, கொரியாலிஸ் தாக்கம் என பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. இருப்பினும் வானில் பயணம் மேற்கொள்ள இயற்கையாகவே பறவைகள் திறனை கொண்டுள்ளன.
இருப்பினும் ஒரு தேசத்திலிருந்து உணவு, இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடல் கடந்து வேறு தேசத்துக்கு வரும் பறவைகள் கூட குறிப்பிட்ட சில ஆயிரம் கிலோ மீட்டர்களில் இறங்கி ஓய்வெடுத்துக்கொண்டே தனது இலக்கை அடைவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இயற்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதனால் உருவாக்கப்பட்ட விமானங்களும் சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடைவிடாமல் பறக்கும் திறன் வாய்ந்தவையாக உள்ளன. எனவே வானில் பல ஆயிரம் கிலோ மீட்டர்களை இயற்கையாலும் செயற்கையாலும் கடக்க முடியாது என்ற கூற்று இதுவரை இருந்து வந்தது.
இந்நிலையில் செயற்கையை காட்டிலும் இயற்கை மிகவும் வலியது என்பதை நிரூபிக்கும் வகையில் கென்யாவை சேர்ந்த ஒனன் என்ற குயிலினப் பறவை ஒன்று பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓய்வின்றி கடந்து இந்தியா வந்தடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கென்யாவில் இருந்த இந்த பறவை கென்யா, சோமாலியா, அரபிக்கடல் அதனை சுற்றியுள்ள தீவுகள் உள்ளிட்டவற்றை ஓய்வின்றி கடந்து கடந்தவாரம் இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசம் வந்துள்ளது. இந்த பறவை ஒரு வாரத்துக்கு சுமார் 5000 கிலோ மீட்டர்களை கடந்து வந்துள்ளது.
இந்த ஒனன் பறவை கடலைக்கடக்கும் போது நிற்பதில்லை, இவை ஓய்வின்றி பறக்கின்றன. பயணதூரத்தை கடக்கும் போது உணவும் அருந்துவதில்லை, ஏனெனில் அவை பயணத்தை தொடங்கும் போதே தனது உடலுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைத்துக்கொள்கின்றன.
இந்த பறவை பறக்கும் தூரத்தை ஆராய நினைத்த ஆராய்ச்சியாளர்கள் அந்த பறவையில் சிப்களை பொறுத்தி சேட்டிலைட் மூலம் அதன் தூரத்தை அளந்துள்ளனர். மேலும் அது பயணித்த இடம் தூரம் தொடர்பான சேட்டிலைட் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளன.
சென்ற வருடம் ஓனான் பறவையின் பாதை
இது ஒரு வியக்கத்தக்க பயணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இயற்கையை சில தருணங்களில் செயற்கையால் வெல்ல முடியும் என்ற கூற்றை இந்த பறவைகளின் சாதனை தவிடுபொடியாக்கியுள்ளன
பறவைகளின் நீண்ட தூர migrations https://twitter.com/BirdingBeijing பற்றி மூலம் அறியலாம்!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்