மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு தோட்டக்கலைத்துறை பழப்பண்ணையில், பல்வேறு வகையான, 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேட்டுப்பாளையம் – ஊட்டி மெயின் ரோடு கல்லாற்றில், குன்னுார் மலை அடிவாரத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு தோட்டக்கலைத்துறை பழப்பண்ணை உள்ளது.
இங்கு பழங்களின் ராணி என அழைக்கப்படும் ‘மங்குஸ்தான்’, பலா, ரம்பூட்டான், லிட்சி, துரியன் ஆகிய பழமரங்கள் உள்ளன. வாசனை திரவிய பயிர்களான மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கம் மற்றும் பாக்கு, காபி, இலவம்பஞ்சு, கோகோ உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் உள்ளன. மலைகளுக்கு இடையே இப்பண்ணை அமைந்துள்ளதால், நல்ல குளிர்ந்த மூலிகை காற்று வீசுவதால், இது சுற்றுலா தலமாகவும் உள்ளது.இது குறித்து பழப்பண்ணை அலுவலர்கள் கூறியதாவது:
அரசு பழப்பண்ணையில் புதிய நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதே முக்கிய பணி. ஒரு மிளகு நாற்று, 6 ரூபாய், ஜாதிக்காய், 15, பாக்கு, 18, லவங்கம் 6, ரம்பூட்டான், 10, லிட்சி, 10, செர்ரி, 10, அலங்காரச் செடிகள், 10, காபி, 6 ரூபாயுக்கு விற்கப்படுகின்றன.
30 வகையான மேற்பட்ட வகையான நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் நல்ல தரமானதாகும்.தற்போது, மொத்தமாக இரண்டு லட்சம் நாற்றுகள்பண்ணையில் இருப்பு உள்ளன.
விரும்பும் நபர்கள் அலுவலகத்தில் பணத்தை செலுத்தி மொத்தமாகவும், சில்லரையாகவும் நாற்றுகளை பெற்றலாம்.
மேலும், பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாம் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்