கவாத்து செய்த பழமரங்களில் போட்டோ பசை பூசுதல்

பழ மரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கவாத்து செய்வது முக்கியம்.

கவாத்து செய்த மரங்களை போட்டோ மிக்சர் என்ற பூசனக்கொல்லி மருந்தை பசைபோல் தயாரித்து கவாத்து செய்த இடங்களில் பூசுவதால் நோய் கிருமிகள் தாக்காமல் பழமரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
10 சதவீத போட்டோ பசை தயாரிக்க 1 கிலோ காப்பர் சல்பேட் பவுடருடன் 1 கிலோ சுண்ணாம்பு பவுடரை
10 லிட்டர் தண்ணீருடன் கலந்து கட்டியான பசைபோல் தயாரிக்க வேண்டும். இப்பசையைக் கவாத்து செய்தவுடன் காயம்பட்ட இடங்களில் பூச வேண்டியது அவசியம்.
கவனிக்க வேண்டியவை :

  • காப்பர் சல்பேட் கலவையைச் சுண்ணாம்பு பவுடருடன் கலத்தல் அவசியம். மாற்றிக் கலக்கக் கூடாது.
  • இக்கலவையை மண்சட்டி அல்லது மரச்சாமான் அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்து தான் தயாரிக்க வேண்டும்.
  • இரும்பு பாத்திரங்களில் தயாரிக்கக் கூடாது. இக்கலவை தேவைப்படும் பொழுது மட்டும் தயாரித்தல் அவசியமானது.

தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *