பலா மரத்தின் மகிமைகள்

– பழ வகையில் அதிக எடையும் மகசூல் திறனும் கொண்டது பலா. பண்ருட்டி பலா பழத்தில் அதிக சுவை உள்ளதால் இதற்கு தனிப் பெருமை உண்டு.

– ஆரம்ப காலத்தில் வரப்பு ஓர பயிராகவும், வீட்டுத் தோட்டத்திலும், நிழல் தரும் மரமாகவும் அறை கலன்கள் மற்றும் இசைக் கருவிகள் செய்வதற்காகவும் வளர்க்கப்பட்டது.

– பலா மரத்தின் சிறப்புகளையும், அதிக வருவாய் ஈட்டும் திறன், குறைந்த பராமரிப்புச் செலவுகளை உணர்ந்த விவசாயிகள் தற்போது ஏக்கர் கணக்கில் பயிரிட்டு பண்ருட்டிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

– வறட்சி மற்றும் கனமழை பகுதியில் வளரும் பலா மரங்கள் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக பலன் தரக்கூடியவை. மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிற சுளைகளைக் கொண்ட பல ரக மரங்கள் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் காணப்படுகின்றன.

– நன்கு வளர்ந்த மரம் 600 காய்களுக்கு மேல் காய்க்கும். மேலும் பலா மரம் விலை மதிப்பு மிக்கது.

– கேரளம், கர்நாடகம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலாச்சுளை, பிஞ்சு, முற்றாத காய் ஆகியவற்றில் இருந்து பலா ஜூஸ், அல்வா, அப்பளம், வற்றல், மாவு ஆகியவை தயாரித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

– தமிழகத்தில் பலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான பணிகளை விவசாயத் துறையின் மேற்கொண்டுள்ளனர்.

– தமிழகச் சந்தையில் பலாவின் விலை ஏற்றத் தாழ்வுகளை கொண்டுள்ளது. சாகுபடியாளர்கள் பயன்பெற வேண்டுமானால் பலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற வேண்டும். விற்பனை வாய்ப்பை கண்டறிய கூட்டுறவு சங்கத்தின் மூலம் தொழிற்சாலைகளை உருவாக்க தொழில் முனைவோர் உருவாக வேண்டும்.

– மேலும் விபரங்களுக்கு பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்கநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம்

மேலும் விவரங்களுக்கு: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *