பெரியகுளம் அரசு பண்ணையில் பழகன்றுகள் விற்பனை

பெரியகுளம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் “மா ரகங்களின் தங்கம்’ என அழைக்கப்படும் “அல்போன்சா’ மா ஒட்டு ரகம் விற்பனை களை கட்டியுள்ளது.
பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

பெரியகுளத்தில் இருந்து 4 கி.மீ., தூரத்தில், அரசு தோட்டக்கலைப்பண்ணை உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான 19 வகையான கன்றுகள் இங்கு இருப்பில் உள்ளன.தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலமாகவும் வினியோம் செய்யப்படுவதாக தோட்டக்கலைப்பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மா நெருக்கு ஒட்டு ரகமான “மா ரகங்களின் தங்கம்’ என்றழைக்கப்படும் அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசன்ட் மற்றும் கல்லாமை, காசா கன்று ஒன்று 50 ரூபாயாகவும், மா மென்தண்டு ஒட்டு செடிகளான அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசன்ட், காசா, செந்தூரம், ருமானி கன்று ஒன்று 36 ரூபாயாகவும், பெருநெல்லி ஒட்டு ரகம் 25 ரூபாயாகவும் ஆகவும் விற்கப்படுகிறது.

சப்போட்டா ஒட்டு,மாதுளை பதியன், எலுமிச்சை, பப்பாளி, வீரிய பப்பாளி நாற்றுகள், புளி ஒட்டு, பலா ஒட்டு, விதையில்லாத நாவல் ஒட்டு, சவுக்கு,இலவம், தேக்கு, கறிவேப்பிலை, மல்லிகை, வேப்பம், புங்கன் கன்றுகள் மற்றும் அலங்கார செடி வகைகளும் விற்பனைக்கு தயாராக உள்ளது.

5 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரையிலும் கன்றுகள் விற்கப்படுவதாக தோட்டக்கலை அலுவலர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 04546231726

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *