அதிகபடியான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் உபயோக படுத்தி, வளர்ந்த தீவனங்களால் மாடுகளுக்கு உடல் நல குறைவு ஏற்படும் என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருகிரர்கள்.
பஞ்சாபில் உள்ள வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள Dr குப்தா மேற்கொண்ட ஆராய்ச்சியில், 183 தீவனங்கள் சோதனை செய்யப்பட்டதில், பல, அளவுக்கு மீறி நெயத்ராத் (nitrate ) இருப்பது தெரிய வந்துள்ளது. அளவுக்கு மீறி உரமும், பூச்சி மருந்துகளும் செடியில் போட்டால், செடிகள், அவற்றை பயன் படுத்த தெரியாமல் செடியிலேயே அவை தங்கி விடுகின்றன.
இப்படி பட்ட செடிகளை, தீவனங்களை தின்னும் மாடுகளுக்கு வியாதிகள் வருகின்றன. பல நேரங்களில் வாயில் எச்சல் விட்டு மடிந்து விடுகின்றன என்கிறார் Dr குப்தா. அவர் சொல்லும் சில டிப்ஸ்:
– தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற உரங்களை உபயோக படுத்த கூடாது
– இயற்கை எருவையும் செயற்கை உரங்களையும் கலந்து பயன் படுத்த கூடாது
– சாக்கடை நீரை செடிகளுக்கு பாசன நீராக உபயோக படுத்த கூடாது. அவற்றில் nitrate அதிகம் இருக்கும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்