உப்பு படிமானத்தால் செயலிழக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புகள்

தேனி மாவட்டத்தில், சொட்டுநீர் பாசன அமைப்புகள், உப்பு படிமானத்தால் செயல்இழந்து வருகின்றன.

இதனை தடுக்க, தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.

  • மாவட்டம் முழுவதும் பல்வேறு பயிர்களுக்கு 25 ஆயிரம் எக்டேர் பரப்பில் சொட்டு நீர் பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • தற்போது, வெயில் அதிகம் உள்ளதால் சொட்டுநீர் பாசன அமைப்புகளில், உப்பு படிமானம் ஆகிறது.
  • இந்த உப்பு படிமானம் காரணமாக, நீர் பாய்ச்சுவதில் பிரச்னை ஏற்பட்டு, அமைப்புகள் செயல் இழக்கின்றன.
  • இப்பிரச்னையை தவிர்க்க, அமிலக்கரைசலை ஒரு நாள் இரவு முழுக்க, சொட்டுநீர் பாசன அமைப்புகளுக்குள் வைத்திருந்தால், உள்ளே படிந்துள்ள உப்பு கரைந்து விடும்.
  • மறுநாள் அமிலக்கரைசலை வெளியேற்றி விட்டால், வழக்கம் போல் அடுத்தடுத்து நீர் பாய்ச்ச முடியும்.
  • அமிலக்கரைசலை பயன்படுத்துவது குறித்து சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுத்த, கம்பெனிகளை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “உப்பு படிமானத்தால் செயலிழக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புகள்

  1. Robert says:

    Could you please advise what kind of acid/chemical shall be used and where it will be available? Do we need any license to buy this chemical from shops? Request to provide general procedure including the dilution ratio.
    Thanks

  2. Karthikeyan says:

    தேக்கு மரம் 2வருடம் வயது நன்கு தடிமன் வர என்ன செய்வது என்று விளக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *