எலியும் பெருங்காயமும்!

இப்போது சொட்டு நீர் பாசனம் அதிகமாக பயன் படுத்த பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. வயல்களில் உள்ள எலிகள் இந்த பைப்களை கடித்து விடுகின்றன.

இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது?

பசுமை விகடனில் இதற்கான பதில் கூறுகிறார் பெங்களூர் KP Drip irrigation நிறுவனத்தின் கோபலக்ரிஷ்ணன்:

 • எலிகள் பொதுவாகவே புதிதாக எந்த பொருள் இருந்தாலும் கடித்து பார்க்கும். எலிகளில் சுபாவம் அது.
 • ஆரம்பத்தில் கடித்து, அதில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன் விட்டுவிடும்.
 • இரண்டாவது காரணம் எலிகளுக்கு தாகம் எடுப்பதால்.
 • தோட்டத்தில் ஆங்காங்கே, சிறு கொட்டான் குச்சியில் நீர் வைத்தால் குழாய்கள் பக்கம் வராது.
 • சிலர் எலிகளை கொல்ல நீரோடு எலி மருந்தை கலக்கிறார்கள். இது இயற்கைக்கு முரணான விஷயம் மட்டும் அல்லாமல் தீங்கு உண்டாகும்.
 • எலிகள் பெருங்காயம் வாசனையை முற்றிலும் வெறுப்பன.
 • ஏக்கருக்கு 100 கிராம் என்ற அளவில் பெருங்காய கட்டியை கட்டி சொட்டு நீர் பாசன தொட்டியில் போட்டு விட்டால், அது கரைந்து போகும்.
 • எலிகள் இந்த வாசனையை கண்டவுடன் நெருங்கவே நெருங்காது!

நன்றி: பசுமை விகடன், 25/07/2010


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “எலியும் பெருங்காயமும்!

 1. subramani periyannan says:

  i have developed spray emitter where clogging is very low and will be of much use for closely planted crops ,in Trichy most of the farmers getting it to replace the existing Emitters.1000 nos.packet costs Rs.300/ only

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *