சூரியஒளியில் நுண்நீர் பாசனம்

தமிழ்நாட்டில் நிரந்தரமாகி விட்ட மின்சார தடையினால், பல விவசாயிகள்  பாதிக்க பட்டுள்ளனர். சிலர் டீசல் பம்ப் போட்டும் நீர் லாரி மூலம் வாங்கியும் பாசனம்  செய்கின்றனர்.  சூரிய ஒளி  மூலம் மின்சாரம் தயாரித்து பம்ப் இயக்கம் தொழிற்நுட்பம் முதலீடு அதிகம்  என்றாலும்  பின்னர் செலவே இல்லை. சில வருடங்களில் முதலீடு எடுத்து விடலாம்
அது மட்டும் இல்லாமல் மின்சாரத்தில் இருந்தும் டீசல் செலவு இருந்தும் நிரந்தர விடுதலை பெறலாம்
சூரிய ஒளி பம்ப் பொருளாதாரம்  பற்றிய ஒரு செய்தி…

சூரியஒளியில் நுண்நீர் பாசனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் முதன் முறையாக சூரியஒளியில் மின்மோட்டார்களை இயக்கி நுண்நீர் பாசன முறையில் வேளாண், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் சூரியஒளி திசைக்கேற்ப இயக்கப்படும் அமைப்பைக் கொண்டு சூரியஒளி சக்தி மூலமாக 5 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டாரை இயக்கி நுண்நீர் பாசன முறையில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்தின் கீழ் மின்சாரம் தடையின்றி தொடர்ந்து காலை 8.30முதல் மாலை 6.30 மணிவரை பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். இத்திட்டத்தில் அரசு 80 சதவீதம் மானியம் வழங்குகிறது.
  • சூரியஒளி சக்தி மூலமாக 4,800 வாட்ஸ் பவர் மின்சாரத்தை உற்பத்தி செய்து 5 குதிரைத் திறன் சக்தி கொண்ட மின்மோட்டாரை இயக்கி நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் நீரினை பம்ப் செய்ய முடியும்.
  • திறந்தவெளி கிணறு, ஆழ்குழாய் கிணறு, தரைமட்ட நீர்த் தொட்டி போன்ற நீர்ப்பாசன ஆதாரங்களைக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.
  • ஆழ்குழாய் கிணறு பாசன ஆதாரத்தின் கட்டமைப்புகளை இணைக்க ரூ. 4 லட்சத்து 39 ஆயிரத்து 950 செலவாகும். இதில் ரூ. 3 லட்சத்து 35 ஆயிரத்து 200 மானியமாக வழங்கப்படும். விவசாயிகள் பங்காக ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 750 செலுத்த வேண்டும்.
  • இதேபோல் திறந்தவெளி கிணறு பாசன ஆதாரத்தில் ரூ. 5 லட்சத்து ஆயிரத்து 512 செலவாகும். இதில் மானியமாக ரூ. 3 லட்சத்து 84 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகள் பங்காக ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 512 செலுத்த வேண்டும்.
  • தரைமட்ட நீர்பாசன அமைப்புக்கு ரூ. 5 லட்சத்து 24 ஆயிரத்து 650 செலவு ஆகும். இதில் மானியமாக ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்து 872 வழங்கப்படும். விவசாயிகள் பங்காக ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 778 செலுத்தவேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 45 பயனாளிகளைத் தேர்வு செய்து செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சூரியஒளியில் நுண்நீர் பாசனம்

  1. SUBRAMANIAN says:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா பகுதி விவசாய மேம்பாட்டுக்கு சரியான வழிகாட்டி தேவை ஒத்துழைக்க தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *