சொட்டுநீர் பாசன பராமரிப்பு

சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை. முறையாக பராமரித்தால், ஒரு அமைப்பின் மூலம் 15 ஆண்டுகள் வரை பயனடைய முடியும், என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில், இதுவரை தோட்டக்கலைத்துறை மூலம் 35 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் சொந்தமாக சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர்.

இந்ந பாசன அமைப்புகளை விவசாயிகள் முறையாக பராமரிப்பது இல்லை.

இதனால் கடந்த 4 ஆண்டுகளில், சொட்டுநீர்ப் பாசன அமைப்புகள் செயல் இழந்து விடுகின்றன. விவசாயிகளுக்கு, பல லட்சம் ரூபாய் வீணாகிவிடுகிறது.

இதனை முறையாக பராமரித்தால், 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும், என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தேனி தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:

  • சொட்டுநீர் பாசனத்திற்கு வடிகட்டி சாதனம் இருதயம் போல் முக்கியமானது. இதனை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • அதேபோல் முக்கிய குழாய், துணைக்குழாய்களின் எண்ட் கேப்களை வாரம் ஒருமுறை திறந்து விட்டு, கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.
  • பக்கவாட்டு குழாய்களில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • குழாய்களில் உப்பு படிவுகள் ஏற்பட்டு அடைப்பு ஏற்படும். இதனை தவிர்க்க,
  • சொட்டுநீர்ப் பாசன அமைப்புகளின் தண்ணீர் தன்மைக்கு ஏற்ப, மாதம் ஒருமுறையோ அல்லது, மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ நீர்த்த அமிலக்கரைசல் மூலம் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்.
  • எலிகளால் கடிக்கப்பட்ட குழாய்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் பக்கவாட்டு குழாய்களை இணைக்க வேண்டும்.
  • தினமும் 10 நிமிடமாவது சொட்டுநீர் பாசன அமைப்புகளை இயக்கி நீரை வெளியேற்ற வேண்டும்.
  • அதேபோல் மழை பெய்து முடித்த பின், சொட்டுவான்களின் மீது படிந்துள்ள மண் படிவுகளை வெளியேற்ற சொட்டுநீர் பாசன அமைப்புகளை சிறிது நேரம் இயக்க வேண்டும்.
  • தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை பெற வேண்டும்.
  • இது போன்ற நடைமுறைகளை பராமரித்தால் சொட்டுநீர் பாசன அமைப்புகளை, அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பராமரிக்க முடியும். இவ்வாறு கூறினார்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *