சொட்டு நீர் பாசன சாகுபடியில் நீர் மற்றும் மின்சாரம் சேமிப்பு

திண்டிவனம் அடுத்த இறையானூர் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் சொட்டு நீர் பாசனம் குறித்த பயிற்சி நடந்தது.
நீர், நிலவளத் திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சி முகாமிற்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது :
தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஈடு செய்ய முடியும்.
விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சொட்டுநீர் பாசன முறையில் 50 ஏக்கரில் வாழையும், 100 ஏக்கரில் காய்கறி பயிர்களும், 125 ஏக்கரில் நீடித்த நவீன கரும்பு பயிரும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வேளாண் அறிவியல் நிலைய தலைவர் முனைவர் சாத்தையா பேசுகையில், “உயர் விளைச்சல், தரமான பயிர், உற்பத்தி மற்றும் அதிக நிகர வருமானம் பெற வேண்டிய அவசியத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இதற்கு மாற்றுப் பயிர்களாக, உயர் விளைச்சல் தரும் காய்கறிகள், வாழை ஆகியவற்றை சொட்டு நீர் பாசனத்துடன் செய்யும் போது, அதிக மகசூல்,வருவாய் கிடைக்கும்.

சொட்டுநீர் பாசன முறையை கடைபிடிக்கும் போது, நீர் மற்றும் மின்சாரம் தேவை குறைவதோடு மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது’ என்றார்.
பயிற்சியில் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி வரும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *