மகாராஷ்ட்ராவில் மரத்வாடா மற்றும் விதர்பா என்று இரண்டு பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் இரண்டிலுமே நீர் பிரச்னை தலை விரித்து ஆடுகிறது. இப்படிக்கும் 40 வருடம் முன்பு இந்த இடங்கள் இப்படி வரட்சியில் வாடியது இல்லை. அரசின் முட்டாள்தனமான கொள்கைகளும்,மக்களுக்கு நீர் மீது எந்த மதிப்பும் இல்லாததால் இப்போது வறட்சி எப்போதும் உள்ள மாநிலமாக்கி வருகிறது.
விதர்பாவில் தான் இந்தியாவில் அதிகம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விதர்பா பிரச்னையை பின்பு பார்ப்போம். இப்போது மரத்வாடாவின் வறட்சி நிலைமையும் அதன் காரணங்களையும் பார்ப்போமா?
மரத்வாடாவில் இப்போது ஆழ் கிணறுகள் 1000 அடியிலும் நீர் கிடைப்பதில்லை
ஆழத்தில் உள்ள நீர் ஊற்றுகள் இப்போது உறுஞ்சி எடுக்க படுகின்றன.இவை நிரம்ப 1000 வருடங்கள் ஆகும். இவற்றை சர்வ சாதாரணமாக சக்தி வாய்ந்த மோட்டார் வைத்து நீர் உறுஞ்சி தீர்த்து வருகிறார்கள். குடி நீர் இல்லாததால் அரசே சக்தி வாய்ந்த ஆழ் கிணறு போட்டு 1400 டாங்கர் மூலம் நீர் சப்ளை செய்கிறது. மரத்வாடாவில் நிலத்தில் 4 ஆழ்கிணறு Rs 120000 செலவு செய்தும் நீர் 2 மணி நேரமே வருகிறது!
இதற்கு காரணங்கள் என்ன?
இங்கு பாயும் முக்கிய நதி கோதாவரி. இந்த நதி மலைகளிலேயே அணை போட்டு தடை செய்ய படுவதால் நதி பல மாதங்கள் நீரே இல்லை. நம் காவேரி கதை தான்.
சரி இப்படி அணைகள் தடுத்து அந்த நீர் எங்கே போகிறது? ஜெயக்வடி அணை நீர் 30 தொழிற்சாலைகளுக்கு போகிறது. இவற்றில் பீர் தொழிற்சாலையும் அடக்கம் (இவற்றுக்கு நீர் அதிகம் தேவை)
ஔரங்காபாத் நகரம் இந்தியாவின் பீர் தலை நகரம். தினமும் 6 கோடி லிட்டர் குடி நீர் பீர் தயாரிக்க அனுமதி அளித்து உள்ளார்கள்! இங்கே போஸ்டர்ஸ் (Fosters) என்னும் நிறுவனம் முதலில் வந்தது. இப்போது Kingfisher, Foster’s, Carlsberg, Heineken என்று பல பீர் தொழிற்சாலைகள்!!
Pradeep Purandare என்னும் சுற்று சூழ்வியில் நிபுணர் “மரத்வாடா இப்போது நெருக்கடி நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பல விவசாயிகள் நிலங்களை விட்டு விட்டு மும்பை போன்ற நகரங்களுக்கு environmental refugees சுற்று சூழல் அகதிகளாக ஆகி வருகிறார்கள்” என்கிறார்.
இவற்றிக்கெல்லாம் என்ன செய்ய முடியும்?
ஒரு இடத்தில தொழிற்சாலைகளை அனுமதிக்கும் முன்பு அந்த இடத்தில வேண்டிய அளவு நீர் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். பல விதமான தொழிற்சாலைகள் அனுமதிக்கும் பொது அவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் (cumulative impact ) ஆய்வு செய்ய வேண்டும்.
நதிகளில் அணைகளை அளவுக்கு அதிகம் கட்டி நதிகளில் நீர் வருடத்தில் 2 மாதம் மட்டும் வருவதை தடுக்க வேண்டும். கிரௌண்ட் வாட்டர் ரீசார்ஜ் ஆவது இதனால் குறைகிறது.
தமிழ் நாடு ஏற்கனவே நீர் பற்றாக்குறை மாநிலம். நம் மாநிலத்தில் பெப்சி, கோக், பீர் தொழிற்சாலைகளை மூட வேண்டும். கிரௌண்ட் வாட்டர் ரீசார்ஜ் அதிகம் ஆக சிறு அணைகள் கட்ட வேண்டும். இல்லா விட்டால் தமிழ்நாட்டிலும் சுற்று சூழல் அகதிகள் வர கூடும். இது ஒரு அபாய மணியே!
மேலும் அறிய:
- Warning notes from Marathwada: how water wars can consume India
- Trouble for beer industry over Aurangabad water shortage
- Drinking water crisis looms in Marathwada
- Water politics bleeds Marathwada dry
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்