மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டும் உயரும். அதன் மூலம் இம்மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தீரும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறினார்.

  • மழைநீர் சேகரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.  இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
  • விவசாயத்துக்கு முன்பெல்லாம் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டது. இப்போது 200 முதல் 300 அடி ஆழம் வரை போட வேண்டியுள்ளது.
  • இதுபோல தான் குடிநீருக்கும் நிலத்தடி நீரை அதிக ஆழத்தில் இருந்து எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
  • 30 ஆண்டுக்கு முன்னர் தண்ணீர் விற்பனை இல்லை. இப்போது பல அளவுகளில் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலைகளை மாற்ற ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்க முடியும்.
  • ஊரணிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சுத்தம் செய்து அதில் மழை நீரை சேமித்து வைப்பதால் நிலத்தடி நீர் பெருகும்.
  • வீடுகளில் சமையல் அறை மற்றும் குளியல் அறையில் பயன்படுத்தும் நீரை வெளியேற்றும் இடங்களில் கல்வாழை வளர்ப்பதனால் சுத்தமான நீர் கிடைக்கும். இதை நீங்கள் உங்கள் இலலங்களில் செயல்படுத்த வேண்டும்.
  • கிராமங்களில் பிளாஸ்டிக்கை அறவே தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும்.
  • சமீபத்தில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் ஊராட்சி தூய்மையான ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரிடம் விருது பெற்றுள்ளார்கள்.அதுபோல அனைத்து ஊராட்சிகளும் விருது பெற்றிட நீங்கள் முயற்சிக்க வேண்டும். இக் கருத்தரங்கில் கூறப்படும் கருத்துகளை உங்கள் ஊராட்சிகளில் செயல்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *