கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி மா மரங்களுக்கு நீர் இட ஒரு நூதன வழியை கண்டு பிடித்து உள்ளார்.
Nenamanahalli ஊரில் உள்ள N.R. சந்திர சேகர் மா செடிகளுக்கு பாட்டில் மூலம் நீர் பாசனம் செய்கிறார்.
கோலார் மாவட்டம் நீர் குறைந்து வறட்சி உள்ள மாவட்டம்.
இதை சமாளிக்க அவருடைய நூதன முறை என்ன?
ஒவொரு மா மரத்தின் அருகேயும் ஒரு Coke/Pepsi பெப்சி பாட்டில் எடுத்து தலைகீழாக மண்ணில் பாதி வரை புதைத்து வைக்கிறார்.
மண்ணில் உள்ளே உள்ள காப் Cap சிறிது திறந்து வைக்கிறார். பாட்டிலின் மேலே த்வாரம் இட்டு அதன் மூலம் நீர் பாட்டில் உள்ளே இடுகிறார்.
இவ்வாறு விடும் நீர் 4 நாட்கள் வரை மெதுவாக கசிந்து சொட்டு நீர் பாசனம் ஆகிறது.
இதற்கு முன் அவர் தினமும் ஒரு மா மரத்திற்கு 25 லிட்டர் நீர் விட்டு வந்தார். இதன் மூலம் நிறைய நீர் சேமிப்பாகிறது என்கிறார்.
நன்றி: ஹிந்து நாளிதழ் Tuesday March 13
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்