வறட்சியால் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்

 • பருவமழை 2 ஆண்டுகளாக பொய்த்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கரும்பு பயிரை காப்பாற்ற சொட்டுநீர் பாசன முறையை செயல்படுத்த விவசாயிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 • பருவமழை கடந்த 2 ஆண்டுகளாக ஏமாற்றியதால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் “கிடுகிடு’ வென குறைந்து வருகிறது.
 • இது கிணற்று நீர்பாசனத்தை நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 • ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்ய, தொடர்ந்து தண்ணீர் தேவைப்படுகிறது.
 • கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பரப்பு அதிகரிப்பு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பு 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
 • பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், கோடையில் போதிய நீர் பாய்ச்சினால் மட்டுமே பயிரை கருகாமல் காப்பாற்ற முடியும்.
 • இத்துடன் மின்வெட்டு பிரச்னையும் ஏற்பட்டால் கரும்புக்கு நீர்பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படும்.
 • இதற்கு முன்னெச்சரிக்கையாக பயிர்களை பாதுகாக்க சொட்டு நீர் பாசன முறையை செயல்படுத்த இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 •  அரசு வழங்கும் சலுகையை பயன்படுத்தி தங்கள் வயல்களில் இச்சாதனத்தை பொருத்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 • சொட்டுநீர் பாசன சாதனத்தை அமைக்க விரும்புவோருக்கு தோட்டக் கலைத் துறை மானியம் வழங்குகிறது.
 • குறு விவசாயிகளுக்கு முழு மானியத் தொகையான ஒரு ஏக்கருக்கு 43 ஆயிரத்து 816 ரூபாயும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்குகிறது. வேளாண்மை துறை பரிந்துரையில் பல விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.

பருவசீவல் முறை

 

 • இம்முறையால் 60 சதவீதம் தண்ணீரை சேமிக்க முடியும்.
 • வறட்சியான காலங்களில் சாகுபடி செய்த பயிரை கருகாமல் காப்பாற்ற சொட்டுநீர் பாசன முறை கைகொடுக்கிறது.
 • தற்போது பருசீவல் முறையில் உற்பத்தி செய்யும் கரும்பு நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்வது விவசாயிகளிடம் பிரபலமாகி வருகிறது.
 • இதனால் கரும்பு பருத்து வளரும் வரை சீரான தண்ணீர் தேவைப்படுகிறது.
 • இச்சூழலில் தண்ணீர் பற்றாக் குறையால் நாற்றுக்கள் கருகும் அபாயம் உள்ளதால் இப்பிரச்னைக்கு சொட்டுநீர் பாசன முறை நல்ல தீர்வாக அமைந்துள்ளது.
 • பருவமழை பொய்த்துள்ள நிலையில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனமுறை வரப்பிரசாதமாக இருப்பதால் பலரும் இதை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின் றனர்.

ஊக்குவிப்பு அவசியம்

 • கள்ளக்குறிச்சி பகுதியில் கரும்பு சாகுபடி செய்துள்ள மொத்த பரப்பை கணக்கிடும் போது சொட்டு நீர் பாசனத்தை 5 சதவீதம் விவசாயிகள் கூட தங்கள் வயலில் அமைக்கவில்லை.
 • கடந்த ஆண்டுகளில் நீர் பற்றாக்குறையால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்போது விவசாயிகளே முன்வந்து இச்சாதனத்தை பொருத்துகின்றனர்.
 • இவர்களை வேளாண்துறையினர் ஊக்கப்படுத்தி அரசு சலுகையை பெற்று தந்தால் பலர் இதன் மூலம் பயனடைவார்கள்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *