வறட்சியைத் தாங்கும் சப்போட்டா

“வறட்சியைத் தாங்கி வளர்ந்து அதிக லாபம் தரும் பயிர் சப்போட்டா”  என வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கின்றனர்

இதன் சிறப்பு இயல்புகள்:

 • வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது
 • ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்யக்கூடியது
 • பராமரிப்பு செலவு மிகக் குறைவாகும்.
 • சாகுபடி காலங்களில் அதிகக் கூலியாள்களும் தேவையில்லை.
 • முக்கியமாக, தண்ணீர் அதிகம் தேவைப்படாது.
 • இதன் சாகுபடிக்கு சொட்டு நீர்பாசன முறை சிறப்பானது
 • உரத் தேவையும் மிகக் குறைவு.
 • நட்ட 3 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும்.
 • ஏக்கருக்கு 65 செடிகள் வரை நடலாம்.
 • சராசரியாக ஆண்டுக்கு 50 முதல் 100 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
 • இந்தப் பழங்கள் கிலோ ரூ. 10-க்குக் குறையாமல் விலைபோகின்றன.
 • மார்ச் – ஏப்ரலில் பூத்து, 90 நாள்களில் காய்ப்புக்கு வரும். அடுத்து அக்டோபர்- நவம்பரில் பூத்துக் காய்க்கும்.
 • இதன் சாகுபடிக்கு அரசு வேளாண் துறையில் இருந்து சொட்டு நீர் பாசனம் அமைக்க 65 சத மானியம் அளித்து வருகின்றனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *