குஜிலியம்பாறை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், நிலக்கடலை, கரும்பு ஆகியன போதுமான மழை இல்லாத காரணத்திலும், நீர் ஆதாரம் குறைந்து வருவதாலும் பயிர்கள் சற்று வாடும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், பயிர்களை பாதுகாக்க வேளாண்மை உதவி இயக்குநர் ரவிபாரதி யோசனை தெரிவித்துள்ளார்.
- பொட்டாசியம் குளோரைடு 2 சதவீத கரைசல் தெளிப்பதின் மூலம் பயிர்கள் இழைவழியாக நீர் ஆவியாதல் குறைக்கப்படுகிறது.
- இதன் காரணமாக மகசூல் தரக்கூடி பூ , பிஞ்சுகள் உதிராமல் பயன்தரக்கூடிய அளவில் மகசூல் கிடைக்கும்.பயிறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயிறு ஆகிவற்றில் பூக்கும் தருணம், 2 சதவீத டி.ஏ.பி., இழை வழி கரைசல் தெளிக்க சிபாரிசு செய்யப்படுகிறது.
- இதனால் ஏக்கருக்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை கூடுதல் மகசூல் கிடைக்க செய்யும்.
- மிக இக்கட்டடான சூழ்நிலையில், பாசன நீரை சிக்கனமாகவும் விரையமின்றியம் பயிர்களுக்கு கிடைத்திட ஏதுவாக தெளிப்பு நீர் கருவிகள்
மற்றும் மழை தூவுவான் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. - மேலும் விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்