விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை இலவச பயிற்சி

மதுரை விநாயகபுரத்தில் உள்ள மாநில நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், விவசாயிகளுக்கு தண்ணீர் சிக்கனம் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதுரையில் 2014 ஜூன் 3 முதல் 6 வரை, திண்டுக்கல்லில்  2014 ஜூலை 1 முதல் 4 வரை, தேனியில்  2014 ஜூலை 8 முதல் 11 வரை, ராமநாதபுரத்தில்  2014 அக்., 7 முதல் 10 வரை, சிவகங்கையில்  2014 டிச., 2 முதல் 5 வரை, விருதுநகரில் 2014 ஜூன் 24 முதல் 27 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

சொட்டுநீர், தெளிப்பு நீர், பண்ணை குட்டை அமைத்தல், வயல்வெளிகளில் மழைநீர் சேகரிப்பு, மாற்றுப் பயிர் திட்டம் மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர் சாகுபடி குறித்த நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதிய உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்படும், என துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு: 0452 2911058ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *