வீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம்

கோக், பெப்சி பாட்டில் பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள்  நிகாரகுவா (Nicaragua) நாட்டில். இதைமுன்பு படித்தோம்.  இப்போது, கேரளத்திலும் இந்த முறையை பயன் படுத்துகிறார்கள். இதோ அதை பற்றிய செய்தி:

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மழை போதிய அளவு பெய்யாத நிலையில் கடும் வெப்பம், வீடுகளில் உள்ள தோட்டங்களை கடுமையாக பாதித்து வருகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காய்கறித் தோட்டம் அமைத்திருப்பவர்கள், அலங்காரச் செடிகளை நடவு செய்துள்ள இல்லத்தரசிகள் மற்றும் குழந்தைகள் தங்களது தோட்டங்கள் அழிந்து வருவதை வேதனையுடன் காணும் சூழல் உள்ளது.

மின்வெட்டு பிரச்னை காரணமாக ஏற்படும் நீர் பற்றாக்குறை சூழலும், வீட்டுத் தோட்டங்களுக்கு தேவைப்படும் அதிகளவு நீர்ப் பாசன தேவையை நிறைவு செய்ய உதவுவது கிடையாது.

இத்தகைய நடைமுறை சூழலில் வீட்டுத் தோட்டங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளைப் பாதுகாக்கவும், வீடுகளின் காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும் குறைந்த செலவில், தொழில்நுட்பத் திறனில் பயனில்லாமல் போகும் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் பெரிதும் உதவி செய்கிறது.

எளிய பாசன தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீண் தெரிவித்தது:

 

  • கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தில் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி புதிய மற்றும் எளியப் பாசன தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • இப்புதிய பாசன முறையில் மருத்துவமனைகள், வீடுகளில் மருத்துவத் தேவைகள் முடிந்து கழிவுகளாக எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
  • பின்னர் இவை நன்றாக சுத்தம் செய்யப்பட்டு இவற்றில் நல்ல தண்ணீர் அடைக்கப்படுகிறது.
  • பின்னர் இலை சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களுடன் இணைக்கப்பட்ட குழாய்கள் வாயிலாக செடிகளின் வேர் பகுதிக்குள் செலுத்தப்படுகிறது.
  • சொட்டு நீர்ப் பாசன முறையில் நாள் முழுவதும் தண்ணீர் சொட்டுகளாக செடிகளின் தேவையை நிறைவு செய்வதால், அவை வெப்பத்தை தாங்கி எளிதாக வளர முடிகிறது.
  • மேலும் நாள் முழுவதும் தண்ணீர் பாசனம் செய்யப்படுவதால் தோட்டங்களில் நல்ல குளிர்ச்சியும் ஏற்படுகிறது.
  • தற்போதைய புதிய பாசன முறையில் நேரடியாகவே நீர்ப் பாசனம் செய்யப்படுவதால், வீட்டுத் தோட்டங்களில் களைகளுக்கு தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படுகிறது.
  • இப்புதிய எளிய தோட்டக்கலை பாசன முறை வாயிலாக கேரள மாநிலத்தில் வீடுகளில் பல மருத்துவச் செடிகள், மூலிகைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
  • இவ்வாறு மிகவும் குறைந்த செலவில் பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள முறையில் நீர் பாசனத்துக்குப் பயன்படுத்தி அடுக்குமாடிக் குடியிருப்புத் தோட்டங்கள், வீடுகளின் வாயிலாக உள்ள காய்கறித் தோட்டங்களை எளிதாகப் பாதுகாக்க முடியும்.
  • தற்போது கேரள மாநிலத்தில் வீட்டுத் தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய பாசன முறையில் தண்ணீரில் கரையும் உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி அதிகளவில் மகசூல் பெற முடியும்.
  • பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த எளிய மூலிகைக் கரைசல், பூச்சி விரட்டிகளை இப்புதிய பாசன தொழில்நுட்பத்தின் மூலம் கலந்து பயன்படுத்த முடியும்.
  • வீட்டுத் தோட்டங்களில் உள்ள பூக்கள் அதிகமாக பூக்கவும், தேவைப்படும் பயிர் ஊக்கிகளை பயன்படுத்தி செடிகளின் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.
  • எனவே அடுக்குமாடிக் குடியிருப்புகள் வீட்டு காய்கறித் தோட்டங்கள், அலங்காரச் செடிகளை வளர்ப்பவர்கள் இப்புதிய பாசன முறை தொழில்நுட்பம் மூலம் கடும் வெப்பம் மற்றும் மின்வெட்டு பிரச்னையில் இருந்து பாதுகாத்து குறைந்த செலவில், குறைந்த நீரைப் பயன்படுத்தி தங்களது தோட்டங்களைப் பாதுகாக்கலாம்.அதிக மகசூலையும் பெறலாம் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீண்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *